பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 - திருமுருகாற்றுப்படை விளக்கம் சில புலவர்கள் ஆராய்ச்சி செய்து பாடத் தொடங் கினர்கள். எப்போது, எங்கே, அந்த மணத்தை அரசன் நுகர்ந்தான் என்பதைத் துப்பு அறிந்து, மாதேவியின் கூந்தலிலிருந்து மணம் வந்தது என்பதை உணர்ந்துகொண்டு அவர்கள் பாடினர்கள். அந்தப் பாடல்கள் பாண்டிமா தேவியினுடைய சிறப்பையும், அழகையும் பாராட்டுவன வாக அமைந்தன. பாண்டியன் எதனே விரும்பவில்லையோ அதனேயே அவர்கள் செய்தார்கள். தன் மனைவியைப் பற்றிய குறிப்பே இல்லாமல் பொது வகையில் கன்மங்கை யர் கூந்தலுக்குள்ள இயற்கை மணத்தை அழகுக் கவிதை யாகச் சொல்லவேண்டு மென்பதே அவன் விருப்பம். புலவர் களோ பாண்டியனுடைய உள்ளத்தை உவகையுறச் செய்ய வேண்டுமென்று அவனுடைய மனைவியைப் பாராட்டத் தொடங்கினர்கள். குறிப்பாகவும், நுட்பமாகவும் ஒன்றைச் சொல்வதிலுள்ள இன்பம் வெளிப்படையாகச் சொல்வதில் இருப்பது இல்லை. இலக்கியத்தில் எத்தனைக்கு எத்தனை குறிப்பு அமைந்து கிடக்கிறதோ அத்தனைக்கு அத்தனை இன்பம் கிடைக்கும். அந்த வகையில் சங்கப் புலவர்கள் பாட்டு அமையாமையில்ை பாண்டியனுடைய உள்ளம் உவகை அடையவில்லை. 'இவ்வளவு சிறந்த புலவர்கள் இருந்தும் கம் உள்ளக் கிடக்கையைத் தெரிந்து உண்மையை நுட்பமாகச் சொல்ல யாரும் முன் வரவில்லையே' என்று அவன் வருந்தினன். "இனி என்ன செய்வது? என்ற ஆராய்ச்சி பிறந்தது. "உலகில் வேறு அறிவாளிகளே இராமல் போவார்களா? தமிழ்நாடு முழுவதிலும் இந்தச் செய்தியைப் பறைசாற்று வித்து யாரேனும் பெரும் புலவர் நுட்பமான இந்தக் கருத்தைக் கவிதையில் அமைத்தாரானல் அவருக்குச் சிறந்த