பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 திருமுருகாற்றுப்படை விளக்கம் இவை காலத்தினல் பிற்பட்டவை என்பதளுல் இவற்றின் மதிப்புக் குறையாது. பக்திச் சுவை செறிந்த, பாடல்கள் இவை கேட்பவர்களின் மனத்தை உருக்கும் வகையில் அமைந்தவை. ஆதலின் இவற்றைத் திருமுரு, காற்றுப்படையோடு சேர்த்துப் படிப்பதனலும் பாராயணம் செய்வதனலும் கன்மை உண்டாகும். இவ்வாறு மூலநூல் செய்த ஆசிரியர் வேருகவும், பயன் கூறும் ஆசிரியர் வேருகவும் இருப்பது புதிதன்று. இந்தப் பத்துப் பாடல்களில் முருகனே முன்னிலைப் படுத்தியும் படர்க்கையாக வைத்தும் பாடும் பாடல்கள் இருக்கின்றன. 9-ஆவது வெண்பா திருமுருகாற்றுப் படையைப் பூசையாக் கொண்டே புக'லும்படியும், 10-ஆம் பாடல் இதனை ஓதினல் வரும் பயனேயும் கூறுகின்றன. 1 உள்ளத்தில் உறை. இனி அந்த வெண்பாக்களைப் பார்க்கலாம். குன்றம் எறிந்தாய்! குரைகடலில் சூர்தடிந்தாய்! புன்தலைய பூதப் பொருபடையாய்!- என்றும் இளையாய்! அழகியாய்! ஏறுார்ந்தான் ஏறே! உளையாய்என் உள்ளத் துறை. (கிரவுஞ்ச மலையை வேலே வீசி எறிந்து அழித்தவனே, ஒலிக்கின்ற கடலிலே புகுந்து ம்றைந்த சூரபதுமனேக் கொன்றவனே, சிவந்த தலையையுடைய பூதங்கள் கிறைந்த, போர் செய்யும் படைகளை உடையவனே, என்றும் மாருத, இளமையையுடையவனே, என்றும் மாருத அழகையுடைய