பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 திருமுருகாற்றுப்படை விளக்கம் பக்தியினுல் முருகனைத் தியானிப்பவர்கள் யாவரும் அவனுடைய திருவுருவ தரிசனம் பெறுவதில்லை. அவனே அருள் கொண்டு தன் உருவைக் காட்டினல் காணலாம். 'காண்பாரார் கண்ணுதலாய்க் காட்டாக் காலே' என்பது அப்பர் திருவாக்கு. அவன் அப்படிக் காட்டும்போது மின்னற்கீற்று அடித்தது போலத் தோன்றி மறைந்தால் பயன் இல்லை; என்றும் உள்ளமே கோயிலாகக் கொண்டு தங்கிவிட வேண்டும். - சில செல்வர்கள் பல இடங்களுக்குப் போவார்கள். அப்படிப் போகின்ற இடங்களில் மாளிகைகள் இருக்கும். அங்கெல்லாம் அவர்கள் வருவார்கள், தங்குவார்கள், போய்விடுவார்கள். ஆனல் அவர்கள் கிரந்தரமாகத் தங்கி யிருக்கும் மாளிகை அவர் சொந்த ஊரில் இருக்கும். "என் உள்ளத்தைச் சில காலம் தங்கும் இடமாகக் கொள்ளாமல், எப்போதும் இங்கே இருக்கிறவன் என்று சொல்லும்படி தங்கியிருக்க வேண்டும்’ என்று வேண்டிக் கொள்ளுகிருர், "இங்கேயே இருக்கிறவன் நீ என்று சொல்வதற்கேற்றவய்ை என் உள்ளத்தில் உறைய வேண்டும் என்கிருர். உளேயாய்-உள்ளாயாகி. என்றும் இளமையும் அழகும் வீரமும் கொண்ட வகை முருகன் திருக்கோலம் கொண்டதே அன்பர் களின் மனத்தில் தியான மூர்த்தியாக உறையத்தான். ஆகவே அவனுடைய திருக்கோலத்தை எண்ணி, என் உள்ளத்தில் உறை என்ருர். 2 வீரன் கைவேல் என்றும் இளையபிரான நோக்கி, "என் உள்ளத்தில் எழுந்தருளியிருக்க வேண்டும்' என்று வேண்டிய