பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெண்பாக்கள் 4.15 கெஞ்சில், ஒருகால் கிணக்கின் இருகாலும் தோன்றும். முருகா என்று ஒதும் அடியவர்களுக்கு அஞ்சுவது இல்லே: மனப்போராட்டம் இல்லை; எப்போதும் முருகன் திருவடித் துணை உண்டு. இதையே பாட்டுச் சொல் கிறது. அஞ்சு முகம்தோன்றின் ஆறு முகம்தோன்றும்; வெஞ்சமரில் அஞ்சலென வேல்தோன்றும்;- நெஞ்சில் ஒருகால் கினைக்கின் இருகாலும் தோன்றும்; முருகாஎன்று ஒதுவார் முன், (சமர்-போர். வெஞ்ச மரந்தோன்றின் வேல் தோன்றும் என்பதும் ஒரு பாடம்.) 7 நம்பிக்கை குடும்பத்துடன் வாழும் மனிதர்களுக்கு ஆண்டவன் குடும்பத்துடன் வாழும் தெய்வமாகத் தோற்றுகிருன் அவரவர்களுடைய மனப்பாங்குக்கு ஏற்பத் தன்னுடைய திருவுருவத்தைக் காட்டும் பேரருளாளன் இறைவன் போலீஸ்காரனுடைய மகனுக்கு. ஆற்றலுள்ள யாருமே போலீஸ்காரராக இருக்க வேண்டுமென்ற ஞாபகம் இருக் கும். அதுபோல் குடும்பத்தில் உழன்று சுழலும் மனிதனுக்கு ஆண்டவனும் அப்படி இருந்தால் தன்னல் அணுகுவதற்கு உரியவகை இருப்பான் என்ற எண்ணம் உண்டாகும். ஆண்டவனும் அப்படியே ஒரு குடும்பியாகத் தோற்று .கிருன். அது தோற்றம் மாத்திரமேயன்றி உண்மையில் அவன் குடும்பத்தில் அகப்பட்டவன் அல்லன். உலகம் அமுழுவதும் ஒரு குடும்பம். அதற்குத் தலைவகை இருப்பவன்