பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 - திருமுருகாற்றுப்பட்ை விளக்கம் அத்தகைய பெருமானுடைய திருமேனிக்குச் சூரியனை உவமை சொல்வது போதாது. ஆலுைம் முருகப் பெரு. மானைத் தரிசனம் செய்ய வேண்டுமென்ற வேட்கை உடை. யவனுக்கு அவன் அறிந்த சோதியுள் பெரிய சோதியை: உவமையாகக் காட்டுகிருர் நக்கீரர். சுடர் உவமை நாம் அறிந்த சோதி மூன்று. சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய மூன்றையும் முச்சுடர் என்று சொல்கிருேம். அக்கினி நெருப்பாகவும், விளக்காகவும் நமக்குக் காட்சி தருகின்றது. சந்திரனேயும், சூரியனையும் வானத்தில் பார்க் கிருேம். இந்த மூன்று வகைச் சுடர்களிலும் மிகப் பெரிய சுடராக சிலவுவது சூரியன். தெரிந்தவற்றைக் கொண்டு. தெரியாத ஒன்றைக் காட்டுவது முறை. காம் அறிந்த சுடர்களுள் மிகப் பெரிய குரியனே உவமையாக்கு கிருர் கக்கீரர். முருகப்பெருமான் குரியனேப் போல இருக்கிறவன் என்று சொல்ல வருகிரு.ர். குரியனே எப்போதும் கண்ணுர உற்று கோக்க முடியாது. உச்சி வானத்தில் இருக்கும்போது அவனப் பார்த்தால் கண் கூசும். இளஞாயிருக இருக்கும்போது செக்கச் செவேல் என்று வட்ட வடிவமாகக் கண்ணுல் காணும் வகையில் காட்சி அளிப்பான். முருகப்பெருமான் சிவந்த திருமேனி உடையவன். மந்திர ஜபம் பண்ணு: கிறவர்களுக்கு அவனுடைய தியான சுலோகம் வினேவுக்கு. வரலாம். அவன் குங்குமம் போன்ற சிவப்பு நிறம் உடையவன் என்று அது தொடங்குகிறது. அத்தகைய பெருமான் உண்மையான அன்பர்களுடைய உள்ளத் தில் செக்கச்செவேல் என்று தோற்றுவான். அப்போது