பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 4

அன்பர்கள் கூறிஞர்கள். பிறகு அந்தச் சொற்பொழிவுகளை அடியொற்றிய விளக்கவுரையைத் திருமுருக கிருப்ான்ந்த வாரியாரவர்கள் நடத்திய 'திருப்புகழ் அமிர்தம்' என்ற பத்திரி கையில் தொடர்ச்சியாக எழுதி வெளியிட்டுவந்தேன். திருமுருகாற்றுப்படைக்குப் பின்னலே பத்து வெண்பாக்கள் பிற்காலத்தில் சேர்த்து எழுதி ன்வத்திருக்கிறார்கள். அந்த வெண்பாக்களுக்கும் விரிவுரை எழுதினேன். அவை யாவும் நிறைவெய்தியவுடன், 'திருமுருகாற்றுப்படை விளக்கம்" என்ற பெயருடன் அந்தக் கட்டுரைகளை வெளியிட்டேன். அது 70-ஆம் ஆண்டில் அமுத நிலைய வெளியீடாக மலர்ந்தது. அதன் இரண்டாம் பதிப்பே இது.

இந்த விளக்கவுரையில் "வழிகாட்டி'யில் இல்லாத பல வேறு செய்திகளைக் காணலாம். முக்கியமாகச் சமயசம்பந்த மான கருத்துக்களின் விளக்கங்கள் விரிவாக இந்த நூலில் உள்ளன. சில செய்திகளை விளக்கும் உவமைகள் இந்த நூலில் புதியனவாக இருக்கும். நச்சினர்க்கினியர் உரை, வேறு ஒரு பழைய உரை ஆகியவற்றில் உள்ள பலபகுதிகளை இடையிடையே காட்டியிருக்கிறேன்.

ஓரளவு தமிழ் தெரிந்தவர்களும் இதைப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதும், இதைப் படித்த பிறகு திருமுருகாற்றுப்படையின் மூலத்தைப் படித்தால் ஒருவாறு விளங்க வேண்டும் என்பதும் என் எண்ணம். முதற் பதிப்பில் நான் முன்னுரை ஏதும் எழுதவில்லை. இந்த நூலைப் படித்த அன்பர்கள், 'திருமுருகாற்றுப்படையின் பொருள் ஒரளவு தெளிவாகத் தெரிகிறது' என்று சொன்ன தைக் கேட்டு, ஆண்டவன் என் எண்ணத்தை ஒருவாறு திறைவேற்றியருளுகிறான் என்றுணர்ந்து அவன் திருவருளே வாழ்த்தினேன். தமிழ் மக்கள் இதைப் படித்துப் பயன் பெறுவார்கள் என்ற நம்பிக்கையும் உண்டாயிற்று.

இந்தக் கட்டுரைகளைத் திருப்புகழ் அமிர்தத்'தில் வெளியிட்டுதவிய திருமுருக கிருபானந்த்வாரியாரவர்களுக்கு நன்றியறிவு கூரக் கடமைப்பட்டிருக்கிறேன். -


'காந்தமலை'

சென்னை-28                              கி. வா. ஜகந்நாதன்
 25–3—'78