பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 திருமுருகாற்றுப்படை விளக்கம் போதுதான் அவனுடைய முழு அருளும் கம்மை வந்து சாருகிறது. நம்முடைய உள்ளத்தில் இறைவனிடம் உறுதியான அன்பு பூண்டு, அவன் நம்மைக் காப்பாற்று வான் என்ற உறுதியான எண்ணம் வருமானல், நம்மை காமே தாங்கிக் கொள்ளலாம் என்ற எண்ணமும், பிறர் ாம்மைக் காப்பாற்றுவார்கள் என்ற எண்ணமும் போய் விடும். இந்த இரண்டு எண்ணத்தையும் அகற்ற நாம் தெரிந்து கொண்டால் அகங்தை ஒழிந்துவிடும்; இறைவ. லுடைய பேரருள் உதவியும் மக்கு உடனே கிடைக்கும். இவற்றையெல்லாம் எண்ணி, உறுநர்த் தாங்கிய தாள் என்று சொன்னர். உறுார் என்பதற்குத் துன்பத்தை. அடைந்து தன்பால் வந்தவர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். உறுதல் என்பதற்குத் துன்பம் அடைதல் என்றும், அடைதல் என்றும் இரண்டு பொருள்கள் உண்டு. உறு என்பதன் அடியாகப் பிறந்த ஊறு என்ற சொல்லுக்குத் துன்பம் என்ற பொருள் இருத்தலைக் ←alᎢᏮöᎢᏯ5. அறியாமையை அழித்தல் அடுத்தபடியாக, 'மதன் உடை கோன்தாள்' என்று: சொல்கிருர். தன்பால் வந்தவர்களைப் பாதுகாப்பது மாத்திரம் அன்று. அப்படி வந்தவர்களுக்கு உள்ள இன்னலை அவன் மாற்றிவிடுகிருன். பிறவிக்குக் காரண மாக இருப்பது அவித்தை அல்லது அறியாமை. பிரபஞ்ச மாயையினின்றும் மக்கள் மீளுவது இல்லை. இறைவன் அருளால் ஞானம் பெற்ற பிறகே அவர்கள் பேரானந்தப் பெருவாழ்வை அடைகிருர்கள். -