பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

«62 திருமுருக்ாற்றுப்படை விளக்கம் கின்றன. ஊஞ்சலின் மேலே உட்கார்ந்திருக்கிறவர் ஊஞ்சலை அமிழ்த்திலுைம் அதனுடைய பாரம் முழுவதும் கால்களினல் தாங்கப்படுகிறது. அதுபோல எல்லா வற்றுக்கும் ஆதாரமாக இருந்து தாங்குகிற கால்களே உடையவன் ஆண்டவன். அவனுடைய காலுக்குக் கீழே பொருள் இல்லை. "பாதாளம் ஏழினும்கீழ் சொல்கழிவு பாதமலர்' என்று மணிவாசகர் பாடுவார். எல்லாப் பொருளுக்கும் ஆதாரமாக இருக்கிறதல்ை அது எல்லாவற்றையும் தாங்குகிறதேயன்றி, அது தாங்கப்படும் பொருள் அல்ல. இறைவனுடைய அடி எல்லாப் பொருளுக்கும் அடியில், எல்லாவற்றையும் தன்மேலே கிறுத்தித் தாங்கிக் கொண் டிருக்கிறது. அதல்ை தாள் தாங்குகின்றது என்று சொன்னர். ாமக்கோ நம்முடைய காலத் தாங்குவதற்குத் தரை வேண்டும். தாங்குவதற்குரிய பொருள் இல்லாவிட்டால் காம் கீழே விழுந்துவிடுவோம். ஆண்டவனுடைய திருவடி அத்தகையது அன்று. ஆதலின் நம்முடைய கால் தாங்கப் படுவது; ஆண்டவனுடைய கால் தாங்குகிறது. தேய்க்கும் கை அடுத்தபடியாகக் கையில்ை ஆண்டவன் தேய்க் கிருன் என்று சொன்னர். தேய்த்தல்-அடியோடு அழித் தல். இத்தகைய காரியத்தில் கையும், தோளும் தொடர் புடையன. பராக்கிரமத்திற்கு இடமாக இருப்பது தாள் அல்ல; கைதான். புஜபலம் என்று சொல்வார்கள். பகைவர்களே அடியோடு அழித்து வீரத்தைக் காட்டுவன இறைவனுடைய புயங்கள் அல்லது கைகள். ஆதலால்