பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாலையும் கண்ணியும் கடம்ப மாலை எப்போதும் போகத்துக் குரிய மாலையாக முருகன் அணிந்திருப்பது கடம்பமாலை. அவன் போர்க்காலத்தில் அடையாள மாலையாக அணிவது காந்தளங் கண்ணி, மார்பில் அணிகின்ற மாலேக்குத் தார் என்று பெயர். ஆடவர்கள் அணிவது தார். மகளிர் அணிவது கோதை, வீரமும் காதலும் நிறைந்த ஆடவர்கள் எப்போதும் தங்களை அலங்கரித்துக் கொண்டிருப்பார்கள். பல வித மான உடையாலும், அணியாலும் அழகு செய்து கொள்வ தோடு மலர் மாலையை மார்பில் அணிந்திருப்பார்கள். முருகன் கடம்ப மலர் மண மாலையை அணிந்து கொண்டிருக் கிருன். எத்தகைய கடம்ப மலர்? இங்கே கடம்ப மரத்தையே வருணனை செய்யப் புகுகிருர் நக்கீரர். பெரிய மரத்தில் அருமையாக மலர்ந்தது அந்தக் கடம்பமலர். முருகன் எப்போதும் முதன்மையாக இருக்கிற பொருளை எல்லாம் கொள்கிறவன். ஐந்திணையில் முதல் திணையாகிய குறிஞ்சி அவன் நிலம். அந்த கிலத்தில் கார் காலத்தில் பூப்பது கடம்ப மலர். இதோ கார்காலம் வந்துவிட்டது; மேகங்கள் வெள்ளேயாகப் படர்ந்து சென்று கடலில் தண்ணிரை முகந்து கொண்டு கிறைந்த கருப்பத்தோடு வானில் வந்து குளிர்ச்சி பெற்று மழையைப் பொழிகின்றன. கன்னங்