பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*76 திருமுருகாற்றுப்படை விளக்கம் பிற அலங்காரம் அவர்கள் தங்களுடைய காதுகளில் குழைகளே அணிந்திருக்கிருர்கள். குழை என்பது தளிருக்கு ஒரு பெயர். குறிஞ்சி நிலப் பெண்கள் காதில் குழையைச் செருகிக் கொண்டிருந்தார்கள். பிற்காலத்தில் அதற்குப் பதிலாக வேறு நகை வந்துவிட்டது. ஆனலும் குழை யென்ற பெயர் மாறவில்லை. இங்கே குரர மகளிர் தங்க ளுடைய வளப்பமான காதுகளில் அசோகத்தின் தளிர் களைச் செருகிக் கொண்டிருக்கிருர்கள். இரண்டு காதுகளி லும் ஒன்றுக்கொன்று ஒப்பாக கிற்க அந்தத் தளிர்கள் தொங்குகின்றன. அவர்களுடைய மார்பில் வந்து அவை அசைகின்றன. தழைந்த காது ஆதலின் அங்கே அணிந்திருக்கும் அசோகங் தளிர்கள் மார்பில் வந்து புரள்கின்றன. - - துணைத்தக, வண்காது கிறைந்த பிண்டி ஒண்தளிர் நுண்பூண் ஆகம் திளைப்ப. (ஒன்றுக்கு ஒன்று ஒப்பாக கிற்கும்படி, வளப்பமான இரு காதுகளிலும் கிறையச் செருகிய அசோகத்தின் ஒள்ளிய தளிர் நுண்ணிய அணிகலன்களே அணிர்த மார்பில் புரளா) அவர்கள் தங்கள் மார்பில் சந்தனத்தை அணிக் திருக்கிருர்கள். மலையில் சந்தனத்திற்குக் குறைவு எது? பல காலம் வளர்ந்து உரமேறிய சந்தனம் அது. அந்தச் சந்தனக் கட்டையை நன்கு அரைத்து மேலே அப்பி .யிருக்கிருர்கள். மிக மென்மையான சந்தனக் குழம்பைத் தங்களுடைய எகில்களின்மேலே அப்பி அழகு செய்திருக் கிருர்கள். அந்தத் தனங்கள் கோங்கு அரும்பைப் போலத் தோற்றுகின்றன. அப்பின சந்தனப் படலம் மருதம் பூவின் இதழ்களே வைத்தது போல மெல்லிதாகத் தோற்றுகிறது. மருதம் பூவையே மேலே அப்பினல்