பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 திருமுருகாற்றுப்படை விளக்கம் தான் அதைக் கட்டியிருக்கிற சரடு. அப்படித் தொங்கு கின்ற பாம்பு மார்பு வரைக்கும் தொங்கி அந்தப் பேய். மகளின் தனங்களில் மோதுகின்றன. பேய்மகளுடைய வயிறு ஒரே சுரசுரப்பாக இருக்கின்றது. அவள் கடந்தாலே பூமி, அதிர்கிறது. பார்ப்பவர்களுடைய நெஞ்சமும் அதிர்கிறது. அச்சத்தைத் தருகின்ற நடையை உடையவள் அந்தப் பேய்மகள். - உலறிய கதுப்பின் பிறழ்பல் பேழ்வாய்ச் சுழல்விழிப் பசுங்கண் குர்த்த நோக்கின் கழல்கண் கூகையொடு கடும்பாம்பு துரங்கப் பெருமுல்ை அலைக்கும் காதின் பினர்மோட்டு உருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள். (உலர்ந்த கேசத்தையும், ஒன்றுக்கொன்று மாருகக் கோணிய பற்களேயும், ஆழமான வாயையும், சுழலுகின்ற. விழிகளையுடைய பச்சையான கண்களேயும், அச்சத்தைத் தரும் பார்வையையும், கழன்ருற் போன்ற கண்ணையுடைய கோட்டாளுேடு பாம்பு தொங்கப் பெரிய தனங்களை மோதும் காதுகளையும், சுர சுரப்பான வயிற்றையும், அச்சம் பொருந்திய நடையையும் உடைய பயத்தை உண்டாக்கும்: பேய்மகள்.) முன்னலே அரமகளிர்களின் அங்கங்களையும், ஆடல் களையும் வருணித்த நக்கீரர் இப்போது பேய்மகளையும் அப்படியே வருணிக்கிருர். இரண்டையும் அருகருகே வைத்துப் பார்க்கும்போதுதான் ஒன்றன் பெருமையும், மற்றதன் சிறுமையும் நன்கு விளங்குகின்றன. இனி, பேய்மகள் செய்வதைப் பார்க்கலாம். அவள் போர்க்களத்தில் கிடந்த பிணங்களே எல்லாம் பார்க்கிருள். ஒரு பிணத்தைப் பார்த்து அதற்கு அருகில் வெட்டுண்டு. கிடக்கிற தலையைப் பார்த்து எடுக்கிருள். அது பனங்காய்,