உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திரும்பிப்பார்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 பரந்தாமன்: (கண்டிப்பாக) நம்பவேண்டாம். யாணம் பிடிக்கவில்லை. அவ்வளவுதானே... எனக்குக் கல் பூமாலை: இந்த ஞானோதயம் முன்பே வந்திருக்கவேண்டும். பரந்தாமன்: பெரிய பெரிய மனிதர்களுக்கே பிறகுதான் உதயமாகியிருக்கிறது. நான் என்ன சாதாரணம் ...... ('வாழு' புத்தகத்தை எடுத்துக்கொண்டு போகிறான்) பாடம் கற்கும் குழந்தைகள் ஓடி வருகின்றன பூமாலையிடம்] ஒரு குழந்தை அக்கா, அக்கா. அம்புஜம் சொல்றா, நாய் வாலை நிமிர்க்க முடியாதாம். நிஜந்தானா அக்கா!

பூமாலை: ஆமாம். சரி வாங்க படிக்கலாம்... காட்சி 13] [கருடன் பதிப்பகம் பரந்தாமன்: (வாழு புத்தகத்தைக் காட்டியபடி) கருடா ! புத்தகம் எப்படி? கருடன்: ரொம்ப பிரமாதம். பையன் : இந்த புஸ்தகத்திலே ரொம்ப நல்லாயிருக்கிறது.... கருடன்: என்னடா? பையன் : மேல் அட்டைங்க. கருடன்: சீ1அட்டை மாத்திரந்தான் நல்லா இருக்கா? அச்சு கூடத்தான் மணி மணியா இருக்கு. பரந்தாமன்: கருடா ! அச்சு எப்படி, அட்டை எப்படி என்று விமர்சனம் கேட்கவில்லை ; அறிவுரைகள் தந்திருக்கிறேனே, அது எப்படி என்றுதான். கருடன்: ஆஹா ! அதைக் கேக்கணுமா... (புத்தகத்தைப் பிரித்துப் பாடல்) ★