குமுதா : என்னாது... 25 பாண்டியன்: படம் பிடிக்கிறேங்கிறேன். குமுதா: அதானே ! (வெட்கமுடன்) பாண்டியன்: (கேமராவை வாங்கி) ம்... ஸ்டடி பிளீஸ்.... (குமுதா நடராஜர் போல அபிநயம் பிடித்து நிற்கிறாள்) பாண்டியன் : இது என்னா இது ! (அப்போது பூமாலை வருகிறாள்) குமுதா: சின்னம்மா ! பூமாலை: ஏங்கண்ணு! குமுதா : நாங்க தனித்தனியா போட்டோ எடுத்துட்டோம். ரெண்டுபேரும் நிக்கிறோம் நீ எடு ! பூமாலை : ஊஹும் குமுதா ! எனக்கு எடுக்கத் தெரியிலே நீயே எடு ! குமுதா: போசின்னம்மா ! (சிணுங்கியபடி கேமராவை வாங் கிக்கொண்டு) சரி சின்னம்மா ! நீங்க ரெண்டுபேரும் நில்லுங்க நான் எடுக்கிறேன். (களங்கமில்லாமல்) பூமாலை : நானா. குமுதா : போய் நில்லு சின்னம்மா ! (பூமாலை பாண்டியன் அருகே போய் நிற்கிறாள். குமுதா போட்டோ எடுக்கப் போகிறாள்) குமுதா : ஸ்டடி பிளீஸ்... பூமாலை (குண்டுமணியின் சந்தோஷ கூச்சல்- குமுதா நடுங்கியபடி கேமராவைக் கீழே போட்டுவிடுகிறாள்) ஏ... என்ன... என்ன ? குண்டுமணி : (பேப்பரைக் காட்டி) குமுதாம்மா பாஸ்! பாஸ்! பாஸ்! குமுதா: பாஸா !
பக்கம்:திரும்பிப்பார்.pdf/33
தோற்றம்