பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அழ. வள்ளியப்பா

❖ 23முதலிலே ஒருவரின் பின்புறமாகப் போய் நின்றார். தம் இரு கைகளாலும் அந்த மனிதரின் தொந்தியை வளைத்துப் பிடித்தார். மந்திரியுடைய முன் கைகள் இரண்டும் ஒன்றை ஒன்று தொட்டு விட்டன.

உடனே அவரை இடப்பக்கமாக நிற்கச் சொன்னார்.

இன்னொருவரின் தொந்தியை வளைத்துப் பிடித்தார். அவருடைய முன் கைகள் இரண்டும் ஒன்றை ஒன்று தொடவில்லை.

உடனே அவரை வலப்பக்கமாக நிற்க வைத்தார். இப்படி ஒவ்வொருவராய்ப் பார்த்தார். இடப்பக்கத்தில் 12 சின்னத் தொந்திக்காரர்களும், வலப்பக்கத்திலே 5 பெரிய தொந்திக்காரர்களும் நின்றார்கள்.

பெரிய தொந்திக்காரர் ஐவரையும் தேர்ந்தெடுத்து அரண்மனையிலேயே ஒரு மண்டபத்தில் தங்கச் சொன்னார் முன்கோபி ராஜா. எப்படி நாட்டிலே உள்ள மக்கள் அனைவரையும் கொழுகொழு வென்று ஆக்குவது என அவர்கள் கலந்து பேசி விரைவிலே தக்க ஆலோசனைகள் கூறவேண்டும் என்று உத்தரவு போட்டார்.

பெரிய தொந்திக்காரர்கள் ஐவரும் நன்றாகச் சாப்பிடுவார்கள், சாப்பிட்டவுடனே தூங்குவார்கள்;