பக்கம்:திருவடி மாலை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா.இராகவையங்கார்

15



மலைபோ னிதியு மணுவா மதித்து வறுமைகொளுங்
        கலையோ துளியுங் கடலா நினைத்துக் கருவமுறு
நிலையோ பெறாது நரகு படைக்கின்ற
                    [நெஞ்சிற்கியான்
        விலையோ வருளு மிலையோ வடமலை மேலவனே.

குடிபிடிக்கு மானப்பேய் குலம்பிடிக்கு
        மகங்காரக் கூளி யோடு
செடிபிடிக்கும் பேராசைச் செந்நாயு
        மனக்குரங்குந் தினமு மென்னை
மடிபிடிக்கும் விடியலும் வழிமறிக்கு
        நரகநெறி வகுக்கு முன்னை
யடிபிடிக்க வொட்டாவில் வல்லலெலாம்
        வெல்லவரு ளரங்கத் தெந்தாய்.

பாட்டா னளிகண் முரலுமெழிற்
        பங்கே ருகத்தின் மிசையமர்ந்து
சூட்டா ரெகனம் பெடைதிளைக்குந்
        துறைசேர் மல்லி வளநாடி
தாட்டா மரைப்போ துளப்போதிற்
        றணவார் பிறவிச் சலதிபட
மாட்டார் முடிப்போ தவாவுமுதல்
        வன்றாட பிணைந் தெடுத்தலினே.

குலையெடுத்த மரக்கொம்பிற் குதித்துத் தாவுங்
        குரங்கனைத்து நீமுன்னர்க் குறித்த வாறே
மலையெடுத்து மலைகடந்தும் வாழ்ந்த வென்றன்
        மனக்குரங்கு மட்டுமுனை வணங்க லில்லாத்
தலையெடுத்து நிமிர்ந்திருளின் வீழ்த லெல்லாந்
        தயாவுளத்திற் குறியாத தன்மை யென்னோ
சிலையெடுத்த நீலமுகில் போற்புல் லாணித்
        திருப்பதியின் மேவிவளர் தேவ தேவே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவடி_மாலை.pdf/17&oldid=1319026" இலிருந்து மீள்விக்கப்பட்டது