பக்கம்:திருவடி மாலை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36 திருவடி மாலை

நத்தேறு திருக்கரத்தான் ஞாலமெலா
நனியூட்டு நன்றி தேறார்
செத்தேறு பாடைமரஞ் செய்பாவ
மென்னென்று செப்பு மாறே.

98. நலத்துளுந் தீங்கே நடக்கும் வெந்தீயே
னாகநாட் டமுதமே டெட்த
கலத்துளுங் கயப்பே சுவைக்குறு மியல்மேன்
கண்ண நின் கோயிலைச் சூழும்
வலத்துளு நின்னை மதித்திடா துலக
வாழ்க்கையே மனக்கொள்வேன் வைகு
நிலத்துளு மினிப்போ நீணர குளும்யா
னெடும்பொறை யாகுவே னம்மா.

99. மையோ மணியோ வெனுமேனி
மாயோ னடித்தா மரைவாழ்த்தி
மெய்யோ புளக மரும்பவுளம்
வெந்தீ மெழுகின் விரைந்துருகக்
கையோ தலைமேற் குவித்தொருகாற்
கண்ணீர் கலுழக் கண்டறியேன்
ஐயோ வவன்ற னருட்பேரா
றருந்த விழைந்தே னழகிதன்றே.

100. எள்ளற் குரிய மனப்பேயார்க்
கேவற் றொழில்செய் திளைப்பேனைக்
கொள்ளக் கருதிற் கொடும்பாவக்
கோட்டை யகத்தேன் குணமிலென்று
தள்ளக் கருதி னவன்றாளே
சரணம் புகுந்தே னிவையிரண்டால்
விள்ளற் கரிய விழுக்கடவுட்
கடியே னிடரே விளைத்தேனே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவடி_மாலை.pdf/38&oldid=1318750" இலிருந்து மீள்விக்கப்பட்டது