பக்கம்:திருவடி மாலை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42 திருவடி மாலை

இலகலைவாழ் வருணன்மகிழ்ந் தேத்து நாமம்
இந்திரசித் தினைவதைக்க வெண்னு நாமம்
சிலவிலங்குஞ் செப்பவருள் செய்த நாமம்
சீராம நாமமெனச் செப்பு வாயே.

6. கல்லாருங் கற்றாருங் கற்கு நாமம்
* கங்கைமுதற் றீர்த்தபலன் காட்டு நாமம்
வில்லாரும் வீரர்செயம் வேண்டு நாமம்
மெய்ம்மைக்கே பரியாய் மேய நாமம்
சொல்லாருஞ் சொலவேட்குந் துாய நாமம்
தோமரக்க ருளத்தச்சந் தோற்று நாமம்
செல்லாரு மழையினருள் சிறக்கு நாமம்
சீராம நாமமெனச் செப்பு வாயே.

7. அரியகுகப் பெருமாளா தரித்த நாமம்
ஆயிரநா மப்பயனு மளிக்கு நாமம்
பெரியதிரு வடிபரவும் பெரிய நாமம்
பெரும்புண்ணி யப்பயனாப் பிறங்கு நாமம்
‡உரியதந்தை யங்கதனுக் கோது நாமம்
ஒன்னாரும் வழுத்துபுக ழுற்ற நாமம்
தெரியவழற் தடவுள்முனந் தெளித்த நாமம்
சீராம நாமமெனச் செப்பு வாயே.


  • " தீர்த்தஸ்நானம் அநந்தகோடிபலதம் ஸ்ரீராமநாமாம்ருதம்" என்பர் வட நூலார்.

‡" நிற்கின்ற செல்வம் வேண்டி நெறிநின்ற வுயிர்க ளெல்லாங் கற்கின்ற திவன்ற னாமங் கருதுவ திவனைக் கண்டாய்" என்று அங்கதனுக் குரைப்பது காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவடி_மாலை.pdf/44&oldid=1319773" இலிருந்து மீள்விக்கப்பட்டது