பக்கம்:திருவடி மாலை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா.இராகவையங்கார்

7

வில்லாலே யாகாய மெய்வ தாகும்
        விரலாலே வளியளக்க மேவ லாகுங்
கல்லாலே பெருங்கடனீர் கடத்த லாகுங்
        காலாலே வானேறக் கற்ப தாமே.

5.அவியாத் தருப்பைவெஞ் சாயக
        மாஞ்சிலை யாரணங்காந்
தவியாக் கரியர சாகுந்
        தயிர்க்குடத் தங்குமுத்தி
செவியாற் கனவினுந் தெய்வக்
        கவிதை தெரிந்திலெனைக்
கவியாக்கி யாண்ட முழுமுதற்
        றொன்மைக் கடவுளுக்கே.

6. ஏழு லோகமும் வாழ வென்றொரு
        சோழ மண்டல மீதுதன் னிணையில்காவிரி நடுவி லேயர
        வணையிலே வளர் தெய்வதம்
மாழை மாதகலாது மின்னென
        மார்பி லேயொளி ரருண்முகில்
வளமி குந்தமிழ் மறைமொ ழிந்துயர்
        பதின்ம ராடு குணக்கடல்
வேழ மென்பதன்வாயி னால்வெளி
        யாகி வந்த விழுப்பரம்
வேத முள்ளன யாவையும்முத
        லீறு மோதும் வியன்சுடர்
ஊழி யின்னுயிர் முழுதை யுந்தன
        துதரம் வைத்த தனிப்பொருள்
உம்ப ரிம்பரெ லாமு நாபியி
        லுதய மாமுழு முதலரோ.

7. கடன்மிசைக் கிடந்த கருணைவா ரிதியைக்
        கன்மழை தடுத்தகார் முகிலை யடன்மிசைத் தேவர்க் கமுதுபெய் யாரா
        வமுதினை யலர்மகட் கணியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவடி_மாலை.pdf/9&oldid=1318976" இலிருந்து மீள்விக்கப்பட்டது