பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120


செய்வோம்! என்ற விசாரத்தில் அழுந்திய ஏழைச் சீவர்களது விசாரத்தை மாற்றுவதே சீவகாருணியம் - நடந்து நடந்து காலுஞ் சோர்ந்தது, கேட்டுக்கேட்டு காதும் சோர்ந்தது, நினைத்து நினைத்து மனமுஞ் சோர்ந்தது, இனி இப்பாவி வயிற்றுக்கு என்ன செய்வோம்! என்று கண்ணிர் வடிக்கின்ற ஏழைகளுக்கு ஆகாரங் கொடுத்துக் கண்ணிரை மாற்றுவதே சீவகாருணியம் - பகற்போதும் போய்விட்டது. பசியும் வருத்துகின்றது, வேறிடங்களிற போக வெட்கந் தடுக்கின்றது உயிரை விடுவதற்கும் உபாயந் தெரியவில்லை; இவ்வுடம்பை ஏன் எடுத்தோம்! என்று மனமும முகமும் சோர்ந்து சொல்வதற்கு நாவெழாமல் உற்பாத சொப்பனங் கண்ட ஊமையைப் போல் மனம் மறுகுகின்ற மானிகளாகிய சீவர்களுக்கு ஆகாரங் கொடுத்து மானத்தைக் காப்பதுவே சீவ காருணியம் - நாம் முன் பிறப்பில் பசித்தவர்கள் பசிக்குறிப் பறிந்து பசியை நீக்கியிருந்தால், இப்பிறப்பில் நமது பசிக் குறிப்பறிந்து பசியை நீக்குவதற்குப் பிறிதொருவர் நேர்வார். அப்போது அப்படி நாம்செய்ததில்லை, இப்போது நமக்கிப்படிச் செய்வாருமில்லை; என்று விவகரித்துக் கொண்டு தூக்கம் பிடியாமல் துக்கப்படுகின்ற ஏழைச் சீவர்களுக்கு ஆகாரங் கொடுத்துத் துக்கத்தை நீக்கித் தூக்கம் பிடிக்கவைப்பதே சீவகாருணியம் - தேகமுழுதும் நரம்புகள் தோன்றப் பசியினால் இளைத்து உயிரொடுங்கி மூர்ச்சை மூடிய காலத்தும் அயலாரைக் கேட்பது துணியாமற் கடவுளை நினைத்து நினைத்து நெருப்பிற் படுத்து நித்திரை செய்யத் தொடங்குவாரைப் போல அடிவயிற்றிற் கொடிய பசி நெருப்பை வைத்துப் படுக்கத் தொடங்குகின்ற விவேகிகளுக்கு ஆகாரங் கொடுத்து அந்தப் பசி நெருப்பை ஆற்றுவதே சீவகாருணியம் - நேற்றுப் பட்டினிகிடந்தது போ ல்