பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஓதாதுணர்ந்த மாதவச் செல்வர்


நம்முன்னோர் செய்த நற்றவத்தின் பயனாக அறந்தரும் நாவுக்கரசும் ஆலாலசுந்தரரும் பிறந்தருளிய திருமுனைப்பாடி நாட்டிலே (தென்னார்க்காடு மாவட்டத் திலே) இற்றைக்கு 163 ஆண்டுகளுக்கு முன்னே மருதூர் என்னும் சிற்றுாரில் வாழ்ந்த கருணிக வேளாளர் இராமையாப்பிள்ளை அவர்கட்கும், அவர்தம் ஆறாவது மனைவியாராகிய சின்னம்மையாருக்கும் ஐந்தாவது மகவாகத் தோன்றியவர் இராமலிங்க வள்ளலார். இவர் இளமையிலேயே தந்தையையும் தாயையும் இழந்து தமையனார் சபாபதிப்பிள்ளை அவர்களால் வளர்க்கப் பெற்றார். சென்னையில் மகாவித்துவான் சபாபதி முதலியாரிடம் கல்வி பயின்று புராணச் சொற்பொழிவு செய்தலைத் தமது வாழ்க்கைப்பணியாகக் கொண்டிருந்த சபாபதிப்பிள்ளை அவர்கள், தம் தம்பியாரைத் தம் ஆசிரியராகிய மகாவித்துவான் முதலியாரிடம் கல்வி கற்க அனுப்பிவைத்தார். மகாவித்துவான் முதலியாரவர்கள் கருவிலே திருவுடையராகிய இராமலிங்கரது பக்குவ நிலையையும், நுண்மாண் நுழைபுலத்தையும் கூர்ந்துணர்ந்து இவர் தாமே பயிலும் தரமுடையா ரென்பதனை எண்ணிக் கல்வி பயிற்றுவதைக் கைவிட்டார். இந்நிலையில் இராமலிங்கர் சென்னையில் கந்தகோட்டத்தில் எழுந்தருளியுள்ள முருகப்பெருமானை