பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178


அறிவினால் மிக்க அறுவகைச் சமயத்து
அவ்வவர்க்கு அங்கே ஆரருள் புரிந்து

(7–55–9)

என ஆளுடைய நம்பியும்,

'அறுவகைச் சமயத் தோர்க்கும் அவ்வவர்பொருளாய்'

(சிவஞானசித்தியார் சுபக்-1)

'மனமது நினைய வாக்கு வழுத்த மந்திரங்கள் சொல்ல
இனமலர் கையிற் கொண்டங்கு இச்சித்த தெய்வம் போற்றி
சினமுதலகற்றி வாழுஞ் செயலற மானால் யார்க்கும்
முனமொரு தெய்வம் வந்து செயற்கு முன்னிலையாம் அன்றே'

(௸ 113)

என அருள்நந்தி சிவனாரும் அருளிய பொருளுரைகள் இத்தகைய சமரச உணர்வினை நன்கு வலியுறுத்தல் காணலாம்.

'உலக மக்கள் உய்தற் பொருட்டே உலகிற் பல்வேறு சமயங்களும் தோற்றுவிக்கப் பெற்ற நிலையில் அவற்றுள் யாம் மேற்கொண்ட இச்சமய ஒழுகலாறே சிறந்தது. ஏனையோர் மேற்கொண்ட பிறசமய ஒழுகலாறுகள் அத்துணைச் சிறப்புடையன அல்ல எனச் சமய வாதத்தினை மேற்கொண்டு மக்களிடையே வேற்றுமை, உணர்வினைத் தோற்றுவிக்கும் பித்துணர்வுடையோர் செயலைக் கண்டால், எங்கள் பெருமானாகிய இறைவன், அவர்தம் பேதைமையை எண்ணிச் சிரிப்பான். மக்கள் மேற்கொண்ட தவநெறியாகிய சமயம் எதுவாயிருந்தால் என்ன? அவர்கள் எந்த நாட்டில் எந்த நிறத்தினராய்ப் பிறந்தால் என்ன? எல்லாச் சமய நெறிகளும் இறைவனை