பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

250

குறவர் கண் காண வானோர் உலகம் புக்கனர் என்ற செய்தி சிலப்பதிகாரத்திற் கூறப்பட்டது.

பாலைக்கவுதமனார் என்னும் புலவர்பெருமான் இமையவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்னும் சேர மன்னனைப் பதிற்றுப்பத்து மூன்றாம் பத்தினால் பாடிய நிலையில், அம்மன்னன் பாடிப் பெறும் பரிசிலாக 'நீர் வேண்டிய பொருளைக் கொள்வீராக' என்ற பொழுது, அவர்-யானும் என் பார்ப்பணியும் சுவர்க்கம் புக வேண்டும் எனக் கேட்க, சேர மன்னனும் பார்ப்பாரிற் பெரியோரை அழைத்து ஒன்பது பெரு வேள்விகளைச் செய்து பத்தாவது வேள்வியைத் தொடங்கிய நிலையில் புலவர் பெருமானாகிய பார்ப்பானையும் அவர்தம் வாழ்க்கைத் துணைவியாகிய பார்ப்பனியையும் யாவரும் காணாராயினர் என்ற செய்தி பதிற்றுப்பத்து மூன்றாம்பத்தின் பதிகத்தில் கூறப்பட்டுள்ளது.

பல்யானைச் செல்கெழுகுட்டுவன் பாலைக் கவுதமன் விரும்பியவாறு தக்க பார்ப்பனர்களைக் கொண்டு வேள்விகளைச் செய்து பாலைக் கவுதமனாரையும் அவர் தம் வாழ்க்கைத் துணைவியாகிய பார்ப்பணியையும் உடம்பொடு வானுலகத்திற்கு ஏற்றிய இச்செய்தியினை,

'வண்டமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த
திண்டிறல் நெடு வேற் சேரலன்'

(சிலப்பதி... ... கட்டுரைகாதை 63-4)

எனவும்.

நான் மறையாளன் செய்யுட் கொண்டு
மேனிலையுலகம் விடுத்தோன்.

(சிலப் 28 நடுகற் காதை 137-8)