பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

 இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கிய முற்றுணர்வினனாகிய இறைவன், உலகப்பொருள்கள் எவற்றிலுந் தோய்வின்றித் தானே திகழொளியாய்த் தனித்து நிற்கும் நிலையில் சிவம் (அப்பன்) எனவும், உலகெலாமாகி வேறாகி உடனுமாய் இவ்வாறு உலகு உயிர்களொடு கலந்து நிற்கும் நிலையில் சத்தி (அம்மை) எனவும், கூறப்படுவான். ஒருமையில் இருமையனாய் (தாதான்மிய சம்பந்தத்தால் இருதிறப்பட்டு) உலகினை இயக்கி நிற்றல் பற்றி அம்முதல்வனை ஆதி பகவன் (அம்மையப்பன்) என்று வள்ளுவனார் குறித்துள்ளார் எனக்கொள்ளுதல் பெரிதும் ஏற்புடையதாகும். சத்தியும் சிவமும் குணமும் குணியுமாக (பண்பும் பண்புடைய பொருளுமாக) ஒன்றியியைந்துள்ள தொடர்பினைப் புலப்படுத்துவதே “ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்” என்னும் திருமந்திர மாகும். இத்திருமந்திரப் பொருளை மேலும் விரித்து விளக்கும் நிலையில் அமைந்தது,

"பிணைபெணொ டொருமையின் இருமையு முடையணல்" (1-121-3)


எனவரும் ஆளுடைய பிள்ளையார் அருளிச் செயலாகும் 'பிணைபெண்ணோடு ஒருமையின் இருமையுமுடை அண்ணல்' எனப்பிரித்துப் பொருள்கொள்க. தன்னோடு பிணைந்துள்ள அருட்சத்தியாகிய உமாதேவியுடன் பிரிவின்றி இயைந்த ஒருமைத் தன்மையின்கண் சத்தியும் சிவமுமென இரண்டாகப் பகுத்துரைக்கும் இருமைத் தன்மையினை உடைய இறைவன் என்பது இத்தொடரின் பொருளாகும். சிவம் முழுமுதற்பொருள். அருளாகிய சத்தி சிவத்தின் குணமாகும். குணத்திற்கும் குணமுடைய பொருளுக்கும் உள்ள இயைபு தாதான்மிய சம்பந்தமெனப்படும். தாதான்மியம் என்பதற்கு அது தான் ஆதல் எனப்பொருள்