பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

403

புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி
     அறி வழிந்திட்டு ஐம்மேலுந்தி
அலமந்த போதாக அஞ்சேல் என்றருள்செய்வான்

(தேவாரம் 1-130-1)

எனவரும் திருஞானசம்பந்தர் தேவாரமாகும். இவ்வருளுரையினைக் கூர்ந்து சிந்தித்த இராமலிங்க வள்ளலார், ஒரு நிலையில் நில்லாது உலகியலிற் பலவிடங்களிலும் பரந்து திரியும் நெஞ்சத்தினை நோக்கி, "நினக்கு அருள் புரியும் சிவபரம் பொருளை நினையாது உல்கப் பொருள்களிற் சென்று அலைகின்ற நெஞ்சமே ஞானசம்பந்தர் அருளிய புலனைந்தும் பொறிகலங்கி" என்ற பாடற் பொருளை, மயக்கத்தைச் செய்யும் மாயையாகிய மலத்தால் மறைப்புண்டு ஐயோ, மறந்து விட்டாயே" எனவருந்தி அறிவுறுத்துவதாக அமைந்தது,

"இறையோன்
‘புலனைந்தும்' என்றருளும் பொன்
மொழியை மாயா
மலமொன்றி அந்தோ மறந்தாய்"

(1965 கண்ணி 47)

எனவரும் நெஞ்சறிவுறுத்தல்' பகுதியாகும்.

இத்தொடரில் இறையோன் என்றது, சிவமாம் தன்மை பெற்ற திருஞானசம்பந்தப் பிள்ளையாரை.

திருஞானசம்பந்தப் பிள்ளையார், மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையாரும் வேண்டிக் கொண்ட வண்ணம் பாண்டிய நாட்டிற்கு எழுந்தருளி, அதன் தலைநகராகிய மதுரையை நெருங்கிய நிலையில் திருவாலவாயின் கோபுரம் தோன்ற அது கண்டு வியந்து நிலமிசைப் பணிந்து திருவாலவாய் இறைவரைப் போற்றிய திருப்பதிகம்