பக்கம்:திருவருட்பா-11.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 திருவருட்பா

இன்னுல் எனக்குள் எல்லா நலனும் நீன அடைந்த என்னுல் உனக்குள தென்னகன் டாய்மை கன்றவளே முன்தால் வருக்கருள் ஒற்றிஎம் மன்கண் முழுமணியே மன்னுல் மறையின் முடிவே வடிவுடை மாணிக்கமே.

(பொ. - ரை. “எங்களேப் பெற்றெடுத்த தாயே! முன் ளுேரு காலத்தில் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மானிக்க வாசகர் ஆகிய நால்வர்களுக்கும் திருவருள்புரிந்த எம் திருஒற்றியூர்ப் பெருமானுடைய கண்களுக்கு முழுமணியாய் விளங்குபவளே! நிலைபெற்ற நான்கு வேதங்களின் முடிவாய் விளங்குபவளே வடிவுடை மாணிக்கமே! உன்னேச் சரண் புகுந்த எனக்கு உன்னுல் எல்லா நன்மைகளும் உண்டாகி இருக்கின்றன. என்னுல் உனக்குப் பயன் யாது உளது?” (எ-து.)

(அ- செ.) நால்வர் . அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர். மன் நிலபெற்ற, மறை வேதம்,

(இ . கு.) நால்வர், தொகைக் குறிப்பு, நலன், மொழி ஈற்றுப் போலி. என்னே, ஐகாரம் சாரிய்ை. என் --ஐ எனப் பிரிக்க, கண்டாய், முன்னிலை அசைச் சொல்.

(வி ;ை.) இறைவர் மாணிக்கவாசகரை . கொள்ளக் குருவாக வந்துனர். திருநாவுக்கரசரை மற். கருணே காட்டிச் சூலேநோய் தந்து ஆட்கொண்டனர். சம்பந்தருக்கு ஞானப்பால் தந்து ஆட்கொண்டனர். சுந்தர் ரைத் திருமணத்தில் தடுத்தாட்கொண்டனர். இங்ஙனம் ஆட்கொண்டு அருள் செய்தமை கருதியே நம் ஐயா நால் வர்க்கு அருள் ஒற்றி எம்மான்’ என்றனர். நால்வர் என்ப தற்குப் பிரமதேவன் திருக்குமாரர்களாகிய சனகர், சனந்தரர், சஞதரர், சனக்குமாரர்களேயும் குறிக்கும். இவர்கட்கு இறைவர் தட்சணுமூர்த்தியாக இருந்து அருள் உபதேசத் தைச் செய்த குறிப்பை நம் ஐயா கூறியுள்ளர் என்று கூறினும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/206&oldid=681703" இலிருந்து மீள்விக்கப்பட்டது