பக்கம்:திருவருட்பா-11.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமா8ல 8

யே எனது பிழைகுறிப் பாய்எனில் நின்அடிமைப் பேயேன் செயும்வண்ணம் எவ்வண்ண மோஎனப் பெற்றளிக்கும் தாயே கருiணத் தடங்கட லே ஒற்றிச் சாக்குமுத வாயேர் சவுந்தர மானே வடிவுடை மாணிக்கமே.

(1ெ ரை.) என்னைப் பெற்றுக் காக்கும் அன்னையே! கருணை நிறைந்த பெரிய கடலே! திருஒற்றியூரைச் சேர்ந்து விளங்கும் குமுத மலர் போன்ற வாயினே யுடைய அழகிய செளந்தரவல்லியாம் மானே வடிவுடை மாணிக்கமே! நீயே என் தவறுகளைக் குறிப்பிட்டுப் பேசுவாய் என்றால், உன் அடித் தொண்டனுகிய பேயேன் செய்யக்கூடிய நன்மை எந்த நன்மையாக இருக்க முடியும்?” (எ . து.)

(அ - சொ.) அளிக்கும் - காக்கும். தடம் - பெரிய, ஏர் , அழகிய. வண்ணம் . நன்மை.

(இ - கு.) தடம், உரிச்சொல். நீயே, என்பதன் ஏகாரம், பிரிநிலை. வண்ணம், உரிச்சொல்.

(வி. ரை.) இறைவி அகிலாண்டகோடி உயிர்களே ஈன்றவள் ஆதலின், அவற்றில் வள்ளலாரும் ஒருவர் என்பது ளுல் எனப் பெற்றளிக்கும் தாயே” என்றனர். மாதர்களின் வாய்க்குக் குமுத மலரை உவமை கூறுவது புலவர் மரபு. இந்த மரபுபற்றிக் குமுதவாய் எனப்பட்டது. குமுதம் செம்மை நிறமுடையது. இறைவியின் திருப்பெயர்களில் செளந்தரவல்லி என்பதும் ஒன்று. இறைவியின் திருவருள் பெருதவர்கள் எந்த நன்மையையும் செய்ய இயலாது என்னும் குறிப்பில் பேயேன் செயும் வண்ணம் எவ்வண் ணமோ’ என்றனர். (26)

6.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/91&oldid=681793" இலிருந்து மீள்விக்கப்பட்டது