பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு 1 1 r.

மணிகொண்ட நெடுங்கடலில் விழிவளரும் (மாதவனும் அணிகொண்ட புண்டரிகம் அகலாத சதுமுகனும் ஞானக்கண் அதுகொண்டு நாடுமா றுணராதே ஏனத்தின் வடிவாகி எகின்த்தின் வடிவாகி அடிதேடி வருவல்என அவனியெலாம் முழுதிடந்தும் முடிதேடி வருவல் என மூதண்டம் மிசைபறந்தும் காணரிய ஒருபொருளாய்க் களங்கம் அற விளங்குபெரும் சோணகிரி ஏனநிறைந்த சுடரொளியாய் நின்றருள்வோய்" என்று கூறுகிறது.

ஆகவே, மறையும், திருமாலும், பிரமனும் பதி ஞான மின்றிப் பாசஞான முடையவர் ஆதலின், இறைவனக் கண் டிலர். இதனுல்தான், மறைக்கொளித்தாய், நெடுமாற். கொளித்தாய் திசைமுகம்கொள் இறைக்கொளித்தாய்' என்று கூறப்பட்டது.

இறைப்பண்பு பிரம்மனுக்கு இல்லை என்ருயினும் உபசார வழக்குப்பற்றி அவனே இறை என்று கூறப்பட்டது. அரசனே பும் இறை என்று கூறுவது போலக் கொள்க. ஒரு சமயம் இந் திரன் சபையில் தேவமாது நடனம் புரிந்தனள். அதுபோது அவள் நடனத்தை உற்று உற்றுப் பிரமன் பார்த்துக்கொண் டிருந்தனன். இதல்ை வெட்கமுற்ற நடன மாது அவன் நேர் பார்வையில் படாமல் ஆடினள். பிரமன் தன் கழுத்தைத் திருப்பி அவள் நடனத்தைப் பார்ப்பது தன் பெருமைக்குக் குறைவு என்று கருதித் தான் படைக்கும் தெய்வம் ஆதலின், அவள் ஆடிய பக்கமாக மற்றும் ஒரு தலையை உண்டாக்கிக் கொண்டான். அவள் பக்கவாட்டில் ஆடுவதைத் தவிர்த்துப் பிரமனுக்குப் பின் புறமாக ஆடினுள். அப்புறத்திலும், மற். ருெரு த்லேயைப் படைத்துக் கொண்டனன். அதன் பின்பும் அடுத்த பக்கவாட்டத்தில் சென்று ஆடினள். அந்தப் பக்க மும் ஒரு தலையை உண்டாக்கி அவள் நடனத்தைக் கண்டு களித்தான். இவ்வாறு நான்கு திசைகளிலும் தன் தலையைப் படைத்துக் கொண்டமையின் அவன் திசைமுகன் எனப் பட்டான். (97)