பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 திருவருட்பா

(வி - ரை.) இறைவன் அன்பர்கட்கும் ஆன்மாக்களுக் கும் இடைவிடாமலும் கைம்மாறு கருதாமலும் திருவருள் புரிந்து வருதலின், ஒயாக் கருணை முகிலே' எனப்பட்டான். மேகம் கைம்மாறு கருதாது என்பதை நம் திருவள்ளுவர் "கைம்மாறு வேண்டாக் கடப்பாடுமாரி ' என்று கூறுதல் காண்க. சிவபெருமானுக்குமேல் வேறு ஒரு தெய்வமும் இல்லை என்பது நல்லறிஞர்கள் கண்ட முடிபு. திருமூலர் சிவபெருமான ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' என்றும் 'சிவனேடெ க்கும் தெய்வம் தேடினும் இல்லை என்றும் கூறுதல் காண்க. இந்த உண்மையினே வைணவ ஆழ்வார் களில் தலை சிறந்த நம்மாழ்வாரும் சிவபெருமானத்தான் ஒருவன் என்று நன்கு ஒளிமறைவு இன்றிக் கூறுகின்ருர். அவர் திருவாக்கு. ஒருவன் என்று ஏத்த நின்ற நளிர்மதிச் சடையன் ' என்பது. இந்த உண்மையினே வற்புறுத்தவே 'டுதல்கண் ஒருவ' என்றனர் நம் ஐயா. சுடு சொல்லாவது உள்ளம் தூய்மை யுடையவர்கள் வெகுண்டு கூறின் அவ்' வாறே பயனை விளைவிக்கும் சொல்லாகும். இதனுல்தான் திருவள்ளுவர், புலவர் வாய்வழி சுடுசொல்லைப் பெறுதல் கூடாது என்னும் கருத்தில், வில்வேர் உழவர் வகை கொளினும் கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை' என்று எச்சரிக்கை செய்துள்ளனர்.

வடவைக்கனல் என்பது குதிரை முக வடிவில் கடல் மீது இறைவல்ை அமர்த்தப்பட்ட தீ. இது மிக்க வன்மையும் வெம்மையும் உடையது. இதன் வன்மை வெம்மையில்ை தான் கடல் டொங்கி எழாமல் தணிந்து நிற்கிறது. வடவைக் க ைல் ஊழிக் காலத்தில் சீறி எழுந்து உலகை அழித்து விடும். இன்ைேரன்ன காரணங்களால்தாம், வல் வடவைத் தி' என்று கூறப்பட்டது. (112)