பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 திருவருட்பா

செய்யும் கருவிகளாக மேலே கூறப்பட்ட அவை அனைத் தினும் எட்டு மடங்கு மிக்கன அல்லவோ? ஆகவே எவரை யேனும் ஆட்கொள்ள விரும்பினல் என்னை முதலில் ஆட் கொண்டு என் மனத்தில் உள்ள துயரைப் போக்கி அருள் செய்வாயாக." (எ . து )

(அ - சொ.) கோள் - தீமைக் குணங்கள், கொள்ளித் தேள் - நெருப்புப்போல் எரிக்கும் தேள். எண் மடங்கு . எட்டுப் பங்கு, ஆள் - அடிமை ஆள், அஞர் - துன்பம்,

(இ - கு.) வேறு + உற்று, கண்டாய் - முன்னிலை அசைச் சொல். (64)

விடைஇலை யோஅதன் மேல்ஏறி என்முன் விரைந்துவரப் படைஇலை யோதுயர் எல்லாம் துணிக்கப் பதம்கொன்அருள் கொடைஇலை யோஎன் குறைதீர நல்கக் குலவும்என்தாய் புடைஇலை யோஎன் தனக்காகப் பேசஎம் புண்ணியனே.

(பொ. - ரை.) நாங்கள் செய்த தவத்தின் பயனுக எங்கட் கமைந்த புண்ணியப் பொருளே! நான்படும் துயரைப் போக்கி அருள் செய்ய என்முன் வர விரைவில் செல்லும் இரடபம் உன்னிடம் இல்லையா? என் துன்பங்களை வெட்டி எறிய உன்னிடம் ஆயுதம் இல்லையா? அருளுடன் விளங்கும் என் தாயாகிய பார்வதி தேவியார் என் குறைகளே எடுத்து உன்னிடம் சொல்லித் திருவருள் பாலிக்க உன் பக்கத்தில் இல்லையா ? (எ . து )

(அ - சொ.) விடை - இரடபம். படை - ஆயுதம். துணிக்க - வெட்டி எறிய. அருள் கொடை - திருவருள் பாலிப்பு, நல்க - தந்தருள, குலவும் - விளங்கும். புடை . பக்கம்.

(வி - ரை.) இந்தப் பாடலில் இறைவர் தமக்கு இன்ன மும் திருவருள் புரிய மைக்குரிய காரணங்களே நகைச்சுவை