பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவத்திரு குன்றக்குடி அடிகளார் 3 #

ஊழினை வென்று பெருவாழ்வு பெற அருள்க!

இறைவா, ஊழி முதல்வா, நானோ ஊழின் முதல் வனாக நின்றுழல்கின்றேன். . இந்த ஊழினிடமிருந்து எனக்கு விடுதலையில்லையா? விடுதலை எடுத்துக் கொள் வதே ஒழிய, ஒருவர் கொடுத்துப் பெறுவதன்று.

ஊழினின் தும் நான் எளிதில் விடுதலை பெறலாமா? முடியும். நான் நினைக்கின்ற நினைப்புக்கள், எண்ணங்கள், நினைப்போடு-நோக்கத்தோடு செய்யும் செயல்கள்இவைகளைப் பற்றிய நினைவுகள் மிக்க் அழுத்தமாய்ப் பதிந்துவிடுகின்றன. இப்பதிவுகள் எளிதில் நீக்க இயலாதன.

நினைவுப்பதிவுகளே L உலகத்தில் எனக்குப் பழக்கங் களாக வருகின்றன. பின் சில நாட்களில் வழக்கங்களாக அமைகின்றன. இப்பதிவுகளேஊழ். நினைவின் பதிவுகளே பழக்கங்களாகின்றன, வழக்கங்களாகின்றன. நான் பழக் கங்களின் வழியே செல்பவன். பழக்கம் தவிரப் பழகுதலே ஊழின் ஆற்றலை அடக்கும் வழி. - -

நான் இனி திறைய காரியங்களைச் செய்வேன். நான் செய்யும் செயல்களுக்கு உள் நோக்கத்தை எடுத்துக் கொள்ளமாட்டேன். அதாவது தன்னல நயப்புடையபிறருக்குத் திங்கு செய்யக்கூடிய உள் நோக்கத்தை எடுத்துக் கொள்ள மாட்டேன். இது உறுதி. * - இறைவா, எனக்கு, பணி செய்யும் உள்ளத்தினைத் தந்தருள்க! நினைவாற்றலை நன்மைக்கே பயன்படுத்தும். திறனை அருள்க! நன்றல்லது அன்றே மறந்துவிடும் பேருள்ளத்தினைத் தந்தருள்க! பிறர் செய்த நன்மையை என்றும் நினைந்து வாழும் பேற்றினைத் தந்தருள்க!

நான் செய்த நன்றியை எண்ணிப் பெருமிதம் கொள்ளாதவாறு உடன் மறந்து விடும் தகைமையை அருள்க! நான் ஊழை வென்றுவிடுவேன். இறைவா: ஊழினை வென்று வாழும் பெரு வாழ்வினை அருள் செய்க'