பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 . திருவருட் சிந்தனை

அறியாமையிலிருந்து முழு விடுதலை பெற அருள்க!

இறைவா, சூரனைத் தடிந்த ட் கொண்டருளிய தலைவா, சூரன் யார்? வேல் எது? சூரனைத் தடித்த வரலாற்றின் பொருள் என்ன? இறைவா, எனக்கருள் செய்க! சூரன், அறியாமையின் உருவம், புல்லறிவாண்மையின் சின்னம். அறியாமையின் விளைவு அகந்தை. அதனால் ‘தானே எல்லாம்’ -என்ற ஆர்ப்பாட்டம்.

அறியாமையை, அகந்தையை அகற்றுவது அறிவு: நிறை அறிவு: பேரறிவு: அதுவே ஞானம்! இறைவா அறிவு. நிறை அறிவு, பேரறிவு, ஞானம் இவையெல்லாம் என் வாழ்க்கையில் வந்து பொருந்த அருள் செய்க அறியாமைக் கலப்பில்லாத அறிவே அறிவு:

ஒன்று தெரியும், பிறிதொன்று தெரியாது என்ற நிலை கல்லாமை, அறிவு முயற்சி இன்மை; ஒன்றைப் பிறிதொன் நாக அறிதல் அறியாமை.

நன்றைத் தீது என்றும், தீதை நன்று என்றும் முறை பிறழ அறிதல் அறிய மை. நான் அறியாமையிலிருந்து முற்றாக விடுதலை பெற அருள் செய்க! -

அறிவுவளர்ச்சியைக் கெடுக்கும் அகந்தையை, அறவே அகற்றி, யாவர்க்கும் தாழ்வாக நடந்திடும் பெற்றியினை அருள் செய்க: தாழ்தல் - தாழ்ந்து போதல் அறிவை வளர்க்கும்; ஆக்கத்தினைத் தரும்.

இறைவா, எனக்குத் தாழ்வெனும் தன்மை அணியா கட்டும். கற்றல், கேட்டல், உற்றறிதல் ஆகிய அறிவு முயற்சி களில் சோர்விலாது ஈடுபட அருள் செய்க:

தெரிய வேண்டியன தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை அருள் செய்க! தெளிய வேண்டியன தெளிந்து கொள்ள அருள் செய்க! வாழ்க்கைக்கு உறுதியென, நோன் பெனக், கொள்வனக் கொண்டு வாழ்த்திட அருள் செய்க: ‘.