பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவத்திரு குன்றக்குடி அடிகளார் 47

இறைவா உடலை அடக்கு ஆற்றல் அருள்க.

இறைவா, ஞானத்தைத் தேட, ஆன்மா பூரணத்துவம் அடைய எனக்கு உடலைக் கருவியாகத் தந்தனை. நானே உயிர். நான் உன் மகவு. எனக்கு உடைமையே உடல். எனக்கு ஒரு கருவியே இந்த உடல்.

ஆனால், இன்று என்னைக் காணோம். என் ஆத் மாவைக் காணோம்? ஏதோ ஒரு சுட்டுப் பொருளாகப் நான் பயன்படுகிறேன். எனக்கு இங்கு என்ன அதிகாரம் இருக்கிறது? ஒன்றும் இல்லை! - - -

இறைவா, என் உடல் என் மீது அதிகாரம் செய்கிறது. என்னை அதற்கு இரை தேடுவதிலேயே ஈடுபடுத்துகிறது. என் உடலின் களிப்புக்கும் மகிழ்ச்சிக்குமே நான் உழைத்து எய்த்துப்போனேன். - - -

ஆனால், இந்த உடல் ஒரு நொடிப் பொழுது கூட என் தலன் நாடுவதில்லை. எனக்கு உரிய அறிவினைத் தேடும் முயற்சியில் துணை நிற்பதில்லை.

நல்ல நூல்களைக் கற்கவே இடம் கொடுப்பதில்லை. ஏன்? என் தந்தையாகிய உன்னை நினைந்து தொழக்கூட இந்த உடல் அனுமதிப்பதில்லை. -

உயிர்க்கு ஊதியமாகிய தொண்டினை-பிறர் நலம் கருதும் தொண்டினைச் செய்ய அனுமதிப்பதில்லை.

இறைவா, இந்த உடலை அடக்கி ஆண்டிடும் ஆற்றலினைத் தருக. நானும் நல்ல நூல்களைக் கற்றிடும் பேற்றினை அருள் செய்க! - -

உன்னை நினைந்து நினைந்து தொழுது மகிழும் வரத்தினைத் தந்தருள் செய்க! பிறர்க்கு அன்பு செய்து அவர்தம் வாழ்வுக்குத் தொண்டு செய்யும் தூய வாழ்வினை அருள் செய்க! - - -