பக்கம்:திருவருட் பயன்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 துணையாகப் பேரின்பத்தினைப்பெற எண்ணுதலே சிவஞானம் பெற்ற நல்லுயிர்களின் செயலாம் என்பது அறிவுறுத்தியவாறு. அ. இன்புறு நிலை. அஃதாவது, ஆன்மலாபம் அடையும் முறைமை. ஆன்ம சுத்தி கூறிப் பின்னர் அதல்ை எய்தும் ப்யன் கூறினமையின், மேலேயதிகாரத்திைேடு இதற்கு இயைபுண்மையறிக. 71. இன்புறுவார் துன்பார் இருளின் எழுஞ்சுடரின் பின்புகுவார் முன்புகுவார் பின். இ_ள் : முன்னர் ஞானத்தைப் பின்னிட்டுத் தாம் அதற்கு முன் செல்வாகில் துன்புற்றவரே; மிக்க துன்பினைச் செய்யும் மலவிருளிலே கின்றும் எழுந்த ஞான விளக்கினை முன்னிட்டுத் தாம் அதன்பின் செல்வாகில் பேரின்பத்தினை யடைவார் என்க. துன்பவின்பம் அடைதற்குக் காரணம், ஞானத்திற்கு முன் பின் சேறலாயிற்று. கட்டுற்று கின்றவர்க்கும் வீடடையவர்க்கும் தம்முள் வேற்றுமை இதுவென்பதுமாம். இதல்ை, பேரின்பத்தை எய்துவார் இவரென்பது கூறப்பட்டது. விளக்கம் : பசுத்துவம் நீங்கி ஞானத்தைப் பெற்ற நிலையில் வியாபகமாய் நிகழும் ஆன்ம விளக்கத்தைப் பெற்ற நல்லுயிர், முதல்வன் திருவடிகளே அணேந்து இன்புறும் முறைமையினே அறிவிப்பது இவ்வதிகாரமாதலின், இன்புறு நிலே என்னும் பெயர்த்தாயிற்று. இவ்வதிகாரத்தின் முதற்குறள், முதல்வனருளாற் பேரின்பத்தினே எய்துதற்குரியார் இவர் என்பது உணர்த்து கின்றது.