பக்கம்:திருவருட் பயன்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141 ஒருவன் ஒருத்தி என்னும் உவமம், தலைமையும் தன்மையும் பற்றி வந்தது. இதற்கு இவ்வாறன்றி, உயிரினப் பெண்ணியல்பினதாகவும் இறைவனே ஆணியல் பினதாகவும் அறிவில்லார் கூதமது பொருளன். அன்ன இயற்கை அசேதன வடிவிற்கன்றிச் சேதன வடிவிற்கு இன்று ஆதலான். இதல்ை, பேரின் பத்தினை எய்தம் எல்லே கூறப் பட்டது. விளக்கம் : அருளாற்பெறும் ஞானம், இன்பத்திற்குச் சாதனமாம் அத்துணையல்லது, சிவப்பேருகிய இன்பமாகாது என்பது உணர்த்துகின்றது. இறைவனே ஆணுகவும் அவனருளேப் பெண்ணுகவும் உருவகஞ்செய்யும் மரபுண்மை, 'இறையவன் முதல், அவன்றன் இலங்கொளி சத்தியாமே” (சிவப்பிரகாசம் 74) என இவ்வாசிரியர் முன்னுங் கூறியிருத்தலாற் புலனுகும். இங்ஙனம் ஆணுகவும் பெண்ணுகவும் உருவகித்தது, எவ் வுயிர்க் குந் தந்தைபோன்று எல்லாவற்றையும் தனி நின்று ஆளும் தலேமைபற்றியும், அப்பன்வழி நின்று தம்மக்களைப் புரக்கும் அன்புடைய தாய் போன்று பல்லுயிர்க்கும் எளிவந்து அருள்சுரந்துட்டும் தன்மைபற்றியுமேயல்லாது, ஆண்,பெண் ஆகிய வடிவுபற்றியதன்று எனவும், ஆண், பெண் என்னும் இவ் அவயவப் பாகுபாடு அறிவற்ற சடப்பொருளாகிய உடம்புக்கன்றி அறிவேயுருவாகிய சேதனப்பொருளுக்கு இல்லையெனவும் நிரம்ப அழகிய தேசிகர் கூறிய விளக்கம் இங்கு ஊன்றி நினேக்கத்தக்கதாகும். அன்றியும், இக் குறட்பா பிறிதுமொழிதலாகிய ஒட்டலங்காரம் அமைய வந்த