பக்கம்:திருவருட் பயன்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

லும், உயிர்க்குயிராய் நின்று அறிவித்தலால் அவற்றோடு உடனாய் நிற்றலும் என மூவகை நிலைகளையும் ஒருங்குடையான் என்பது, சிவஞானபோதத்தில் அவையே தானேயாய்' என வரும் இரண்டாஞ்சூத்திரத்து, அவையேயாய், தானேயாய், அவையேதானேயாய்' என விரித்துரைக்கப்பட்டது. இத் திருவருட்பயனில், 'எங்கும் எவையும் ..... ஏகம்' என்றதனால் ஒன்றாதலையும், எரியுறு நீர்போல் தங்கும் அவன்’ என்றதனால் உடனாதலையும், தானே தனி என்றதனால் வேறாதலையும் ஆசிரியர் உய்த்துணரவைத்துள்ளமை கூர்ந்து நோக்கத் தக்கதாகும்.

முதல்வன் உயிர்களோடு நீக்கமறக்கலந்து உடனாய் நிற்கவும் உயிர்கட்குப் பிறவித்துன்பம் உண்டாவானேன் என வினவிய மாணாக்கர்க்கு விடையிறுப்பதாக அமைந்தது, அடுத்து வரும் குறட்பாவாகும்.

       9.நலமிலன் நண்ணார்க்கு நண்ணினர்க்கு நல்லன்
         சலமிலன் பேர்சங் கரன்.

இ-ள் : தன் தாளினையடைந்தார்மாட்டு நன்மையினைச் செய்தலும், அதுசெய்யார்மாட்டு அது செய்யாதிருத்தலும் உடையனாயினும், வயிரம் என்பது சிறிதும் இலன்; இன்பத்தினைப்பண்ணும் சங்கரன் என்னும் பெயரினையுடையான் ஆகலான் என்க.

வடமொழியில், சம் என்பது சுகம்; கரன் என்பது பண்ணுவான்; இவையிரண்டும் புணர்ந்து சங்கரன் என நின்றது.

இதனால் விருப்பு வெறுப்பிலனென்பதூஉம், அவரவர் செய்திக்கொத்த பயனுதவும் நடுவுநிலைமையுடையனென்பதூஉம் கூறப்பட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/46&oldid=514434" இலிருந்து மீள்விக்கப்பட்டது