பக்கம்:திருவருட் பயன்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

டும் என்ற மாணாக்கர்க்கு, உயிரியல்பின்வைத்து இருள்மலத் துண்மையினை வற்புறுத்துவதாக அமைந்தது, அடுத்துவரும் குறட்பாவாகும்.

      26. பன்மொழிக ளென்னுணரும் பான்மை தெரியாத
          தன்மையிரு ளார்தந் தது.

இ-ள் : பற்பல வார்த்தைகளாற் பயனென்னை? அறியவேண்டும் பொருள்களை யறியும் பகுதி தோன்றாது நின்ற இயல்பெல்லாம் கருமைநிறத்தினையுடைய மூலமலமாயினார் கொடுத்தது என்க.

அறிய வேண்டும் பொருள்களாவன, பதி, பசு, பாசம் என மூவகைப் பொருள்களும், சரியை கிரியை யோகம் ஞானம் என்ற நால்வகை ஒழுக்கமுமாம். இருளார் என்பது செறலின்கண் வந்த அஃறிணை வழுவமைதி.

இதனால், மூலமலத்தினால் வந்த அறியாமை வலியுறுத்தப்பட்டது.

விளக்கம்: வியாபகமாகிய உயிரறிவை அணுத்தன்மைப் படுத்து மறைத்து நிற்பது ஆணவமலம் என்பது உணர்த்து கின்றது.

பல் மொழிகள் என்-பல சொற்களால் பாரித்து உரைப்பது எதற்கு?. உணரும் பான்மை தெரியாத தன்மையாவது', தானே அறியும் முறைமையை மேற்கொண்டு அறியமுடியாத படி இருளோடொன்றாம் தனிநிலையாகிய கேவலத்திலும், உடல் கருவி உலகு நுகர்பொருள்களைப் பெற்றுள்ள கலப்புநிலை யாகிய சகலத்திலும் உயிராகிய தன்னையும், தன்னைப்பிணித்துள்ள பாசங்களையும், உடனின்றுதவும் தலைவனையும் அறியாதவாறு அறிவு மறைக்கப்பட்டிருத்தல். இத்தன்மை இருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/81&oldid=515359" இலிருந்து மீள்விக்கப்பட்டது