பக்கம்:திருவருட் பயன்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



74

களைக் கூடி அறியமாட்டாதென்றும், இவையிரண்டையுங் கூட்டிச் செயற்படுத்துவது இறைவனது திருவருளேயென்றும் கூறியவாறு 'என்னவே, சிற்றறிவாயுள்ள ஆன்மாவைப் பேரறிவாயுள்ள சிவன் அறிவிக்க அந்த அறிவே ஆதாரமாக ஆன்மா அறிவன் என்றதெனக்கொள்க. இதற்குப் பிரமாணம் திருவாசகத்தில் "அவனருளாலே அவன்தாள் வணங்கி’ (சிவபுராணம்) எனவும், தேவாரத்தில், காண்பாரார் கண்ணுதலாய்க் காட்டாக்காலே (6-95-3) எனவும் வரும் ஏதுக்களைக்கண்டுகொள்க’ (சிவப்பிரகாசம்-65) என மதுரைச் சிவப்பிரகாசர் கூறும் விளக்கம் இக்குறட்பாவுக்கு மிகவும் ஏற்புடையதாகும். இவ்வாறு இறைவனது திருவருள் உடனின்று அறிவித்து உபகரித்து வரவும் அதனையுணராது ஆன்மா நான் செய்தேன். பிறர்செய்தார் என்று கூறிநின்று அத்திருவருளை இகழ்ந்து நிற்றல் ஏன்? எனவினவிய மாணாக்கரை நோக்கி, எடுத்துக் காட்டுமுகமாக அறிவுறுத்துவது அடுத்துவரும் குறட்பாவாகும்.

       34. பாலாழி மீன் ஆளும் பான்மைத் தருளுயிர்கள்
           மாலாழி ஆளும் மறித்து.

இ-ள் : மேலாய அருளின்கட்பட்ட உயிர்கள் அதனோடு பொருந்தி நின்று பேரின்பத்தை நுகராமல் மாயாபோகமாகிய மயக்க வேலையுள் ஆழ்ந்து அழுத்துந் தன்மை திருப்பாற் கடலின்கண் வசிய மீன்கள் பாலைப் பருகாது அதனுள் சிறியதாம் பிராணிகளை வருந்தி தேடியுண்ணும் முறைமையினை யுடைத்து என்க.

மீன்களும் பாலைப் பருகுமாயின், செந்துக்களைத் தேடி ஒருகாற் கிடைத்துங் கிடையாதும் உழலாமல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/97&oldid=515397" இலிருந்து மீள்விக்கப்பட்டது