பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

«ΗΕ -ΗΡ Ο திருவருனேக் கலம்பகம்

ானை யுந் தரித்த மேம்பாடுடையவராகிய, மலைமகள் அற்புதர்ைஉமாதேவியின் நாயகர் எழுந்தருளி யிருக்கின்ற, வயல் அருணைப் பதிசூழ் - வயல்களையுடைய அருணகிரிப் பதியைச் சூழ்ந்த குலவும் இடம் கழியே - விளங்குகின்ற இடத்திலுள்ள உப்பங் கழியே! பலவும் இடங்கு அழியே - எனக்கு நேரிடுகின்ற எல் லாம் துன்பத்தாற் கலங்குதலே; குறவை இனம் கயலே - குறவையினத்தையுடைய கயல்மீனே உறவும் எனக்கு அயலே * எனக்குச் சுற்றமும் புறம்பே, சலம் மிகும் உற்பலமே - நீரில் உயர்ந்து விளங்குகின்ற நீலோற்பலமே !, தளர்வதும் முன் பலமே - யான் வருந்துவதும் முன் செய்த தீவினையின் பயனே, சருவும் அனம் திடரே - சஞ்சரிக்கின்ற அன்னத்தையுடைய மணற்குன்றே ! மனத்து இடரே கழுவும் - மனத்திலே துன் பமே பொருந்தும் ; இலைநெரிசல்பனையே - இலை நெருக்கத்தை யுடைய பனைமரமே இவர் உரை சற்பனையே - பிரிந்த இங் நாயகரது வார்த்தை வஞ்சனையே, இனிய பனி திரையே - இனிமையைத் தருகின்ற குளிர்ச்சி பொருங்கிய அலையே! இனி கித் திரையே இலை - இனிமேல் தாக்கம் என்பதே இல்லை. (முடிவில்லாத வாக்கியங்களில் ஆகும் என்பதை யொட்டுக).

இது காமமிக்க கழிபடர்கிளவி. தலைமகனைக் கானலுற்று வருந்துகின்ற தலைமகள் தனது வேட்கை மிகுதியா ற், கேளா தனவற்றைக் கேட்பனவாக விளித்து, தன் வருத்தங் கூறல். தொடையார் எனவும் பாடங்கொள்வர். சூழ் இடமென்க. குறவை - மீன் விகற்பம். அழி - முதனிலைத் தொழிற் பெயர். உறவு - சுற்றத்தார் அயல் என்றது வரைதலுக்கு முன்னதலி னென்க. இடக்கழி - உப்பங்கழியிடம் என மாற்றியும், இடக்கு அழி - குதர்க்கந் தருகின்ற அழிவு எனவும், சருவும் - மருவுகின்ற எனவும், சற் பனையெனப் பிரித்து நல்ல பனை யென வும் பொருள் கூறுவர்.