பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உரையும் கடுக

கொடு பார்வையதலுைம் - கொடிய பார்வையினலும், மயக்கம் ஆகி சுழலும் விடர் - மயக்கமடைந்து வருந்துகின்ற காமுகர் , அரவம் எலாம் படம் எடுத்து நாட முன் தோன்றினிர்-(உருவே யன்றி) சிலம்பு முதலிய அணிகளெல்லாவற்றையும் கிழிச்சீலையி லெழுதி எடுத்து (மடலேறக்) கருதும்படி எதிரே வந்தீர், அளி வந்து ஊதும் குழல் - வண்டுகள் வந்து ஊதுகின்ற கடந்தல், ஒருசற்று உண்டாயின் - ஒருசிறிது உண்டானல், எப்படி

வாட்டிடுவீர் - எவ்விதம் வருத்துவீர் :

விடர் சுழலும் - மலைப்பிளப்பின்கண் கிரிகின்ற, அரவம் எலாம் - பாம்புகளெல்லாம், படம் எடுத்து முன்ஆட - படத்தை விரித்து எதிரேயாட எனவும்; அளிவந்து ஊதும்குழல் - அன்பு வந்து ஊதப்படுங்குழல் எனவும்; ஒருசற்று - ஒருசிறிது நோம் எனவும் இருபொருள் கொள்க.

தலைமுண்டிதஞ் செய்து வைணவச் சின்னம் பூண்டு, குல முதலிய தாங்கி வீதியிற் பிச்சைக்கு வருகின்ற மகளிரை முன் ளிைலைப்படுத்திக் காமுகன் ஒருவன் தன் காதலைப் புலப்படுத் திக் கூறுவது, கொற்றியாரென்னும் உறுப்பின் இலக்கணமாம். கொற்றி யென்னும் பெயருள்ள துர்க்கையைப்போல்: இவட்குஞ் சூல முதலிய வுண்மையால் கொற்றியாரென வழங்கி னர்போலும்.

இதல்ை பாம்பாட்டிடுவது முண்டெனத் தெரிகிறது. மழலை --கிரம்பாமொழி; சிறுவர்களின் சொல்: அதுபோன்று இன்பந்தருதலின் மழலைமொழி யென் ருர். கண்டாரை வருத் துந் தன்மைத்தாதலின் கொடும் பார்வை யென் ருர். விடர்நிலப்பிளப்புமாம். பார்வை - ஐ கருவிப்பொருளில் வந்தது. படம் - வஸ்திரம்: படாம் என்பதன் குறுக்கல்விகாரமுமாம். தோன்றினிர், வாட்டிடுவீர் என்பன முறையே முன்னிலைட் பன்மை யிறந்தகால வினைமுற்றும் எதிர்கால வினைமுற்றுமாம்