பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் 97

உருவான நூல்களை பேணிப் போற்றிக் காத்தவர். எனவே, அவர்கோல் ஆதி என்பது உண்மையாகும்.

உலகிற்குப் பகவன் ஆதி ( ஆதிபகவன்) என்று பதிந் தமை போன்று. இங்கும் நூற்கும் அறத்திற்கும் செங் கோல் ஆதியாய் நின்றது' என்று அழுத்தமாகப் பதிந்தார். மன்னரை இறைவன் என்றும், இறை என்றும் பதிந்த திருவள்ளுவர் இங்கும் அதனையே வழிமொழிந்தார். எனவே இஃதும், வள்ளுவத்தின் பகுத்தறிவு முனைக்குச்

சான்றாகும்.

'நாலாஞ்சாதி”

இருவருக்குள் பூசல் எழுந்தது. வாய்ச்சண்டையாக வளர்ந்தது. பகடிச்சொல், சுடுசொல், கடுஞ்சொல், கொடுஞ்சொல் என்று வளர்ந்தது. அலுத்துப்போன ஒருவர், -

போடா நாலாஞ்சாதி பயலே' என்றார். மற்றவர், -

தோண்டா நாலாஞ்சாதியிலும்

கீழாஞ்சாதி”

-என்றார்.

அது என்ன நாலாஞ்சாதி மக்களுள் உயர்வு தாழ்வாக நான்கு சாதிகளை வகுத்தனர். வகுத்தவர் வடமொழி யாளர், அவற்றை வருணங்கள்’ என்றனர். நான்காம் வருணம் அவர்கள் சொற்படி சூத்திரர், தமிழில் குடியான வர்-வேளாண்மை செய்பவர்-உழவர் எனப்படுவர். பிற தொழில் செய்பவரும் அடங்குவர். இந்த நான்காம் சாதி என்பதுதான். நாலாஞ்சாதி என்று இழிவான பொருளில், சற்றுக் கொச்சையாகவும் வழங்கப்பட்டது.