பக்கம்:திருவாசகத்தேன்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன் ☐ 115

ஒளிச்சேர்க்கை போன்றதே இறைவனிடம் ஆன்மா நடத்தும் ஞானச்சேர்க்கை. இறைவன் தந்த உலகைக் காக்கவேண்டும். நாளும் தீமைகளுடன் போராடி நல்லவற்றை நிலைநிறுத்த வேண்டும். நன்றல்லாத வற்றை மறக்க வேண்டும். எல்லா உயிர்களிடத்தும் அருளாக்கம் கண்டு வாழ்வித்து வாழ்தல் வேண்டும். இதுவே சமய வாழ்க்கை. கடவுள் எல்லாம் செய்வார் என்று வாளா கிடத்தல் இறைநெறி சார்ந்த வாழ்க்கையுன்று.

கடவுளையும் கடவுளின் அருளையும் மறுத்து வாழ்தல் என்பது அறிவுடைமையன்று. கடவுள் இல்லை என்பது எளிதான்் விவாதம். ஆனால், இந்தப் பரந்த உலகியலில் ஒர் ஒழுங்கு (Order) இருக்கிறது. முறைபிறழாத நிகழ்ச்சிகள் (Consistency) இருக்கின்றன. இவை எப்படி? எதனால் நியதி என்று சமய நூல் கூறும். இப்படியன், இந்நிறத்தன், இவ்வண்ணத்தன் என்ற வரையறை ஏதும் கடவுளுக்கு இல்லை. திருவள்ளுவர், "வாலறிவன்" என்றார். "மூரி முழங்கொலி நீர்" என்றும் "வாசமலர்" என்றும் திருமுறை கூறும். ஆதலால், சமயவாதிகள் பலபடக் கூறும் கடவுள் உருவமும், தன்மைகளைப் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை! கடவுள் உயர்வற உயர்ந்த பேரறிவு புேராற்றல் வரம்பில் இன்பம்!

மாணிக்கவாசகரும் தொடக்க காலத்தில் கடவுளின் அருளை மறுத்து வாழ்ந்திருப்பார் போலும்! "மறுத்தனன் யான் உன் அருளை" என்று கூறுகின்றார். அங்கனம் மறுத்த்து அறியாமையின் விளைவு என்று ஒத்துக் கொள்கின்றார். அறியாமை என்பது தெரியாமையன்று. முறை பிறழ உணர்தல் அறியாமை. மறுத்து வாழ இயலாத கடவுள் அருளை, மறுத்து வாழலாம் என்பது முறை பிறழ்ந்த செயல்தானே! இறைவா! யானுன் அருளை மறுத்ததால் வெறுத்து ஒதுக்கிவிடாதே. மணி, அதன் மதிப்பினை உணர்ந்தர்க்கும் உணராதருக்கும்