பக்கம்:திருவாசகத்தேன்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கல்லவர் பேச வேண்டும்!
அல்லவர் ஏச வேண்டும்!

மாணிக்கவாசகர் பல்வேறு அனுபவங்களைச் சந்தித்தவர். மகிழ்ச்சிக்குரிய அனுபவங்கள் மாணிக்கவாசகர் வாழ்க்கையில் அருமையிலும் அருமை. அமைச்சுப் பொறுப்பிலிருந்த போதும் அந்தப் பொறுப்பை பதவியைக் கடமையாகவும் பாரமாகவும் கருதினாரேயன்றி மகிழ்ச்சியாக கருதவில்லை.

ஆட்சிப் பொறுப்பு எளிதன்று; பொறுப்பு மிகுதியும் உடையது! மழை பெய்யவில்லையா? ஆட்சிக் காவிலின் பிழையே என்பர் சான்றோர். பசி பட்டினியால் சாவா? இரந்து பிழைத்தலா? அனைத்துக்கும் காரணம் ஆட்சியே என்று கூறுவது மரபு. இளங்கோவடிகள் சேரன். செங்குட்டுவன் வாயிலாக ஆட்சி துன்பம் தரும் தகையது என்று கூறுவார்.

"மன்பதைக் காக்கும் கன்குடிப் பிறத்தல்
துன்ப மல்லது தொழுதக வில்"

என்பது சிலப்பதிகாரம்.

இன்று ஆட்சி சுகத்திற்குரியதாக விளங்குகிறது.

இன்று ஆட்சி சுகத்திற்குறியதாக இன்று அரசியல், ஆட்சி அனைத்தும் ஈட்டத்திர்குறியனவாகும். சுகானுபவத்திற்கு உரியனவாகும் விளங்கு-