பக்கம்:திருவாசகத்தேன்.pdf/166

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன் ☐ 157

முடியும்? ஆனால் இன்று தலைவருக்குரிய இலக்கணங்கள் மாறி வருகின்றன. துண்டுகள், (பொருளற்ற- பயனற்ற) பேச்சுத் திறன் இருந்தால் தலைவராகி விடலாம். இந்த இலக்கணங்கள் ‘தலைமை’த் தகுதியாக எண்ணி நடித்தல்! “மண்ணிடை நடித்து” என்பார் . மாணிக்கவாசகர். மண்ணிடை நடித்தல் ஏன்? சில நாள்களாவது உண்மை வாழ்வு வாழக் கூடாதா? இதற்கெல்லாம் காரணம் கேட்டால் “முன் வினையின்” மீது பழிபோட்டுத் திரிவது இயற்கையாகி விட்டது. உலா வருதல், பயணம் செல்லுதல் என்பன வேறு. இவற்றிற்கு நோக்கம் உண்டு. ‘திரிதல்’- பயனற்றது; உழைப்பில்லாமல் யாதொரு பயனுமின்றி ஊரைச் சுற்றுவர்; பிழைப்புக்கு இலவசத் தேநீர்-சோறு எதிர்பார்ப்பர்; காரணம் கேட்டால் “வினைப்பயன்” என்பர். “கெட்ட காலம்” என்பர். “நல்லகாலம் பிறக்கவில்லை” என்பர். “ஆறு மாத காலம் கழியவேண்டும்” என்பர். முன் வினையின்மீது பழி போட்டுவிட்டுச் செயலற்றிருப்பவர்களின்- தூர்த்தர்களாக நடப்பவர்களின் நடிப்பு பயன்தராது. நீண்ட நாள்களுக்குச் செலாவணியாகாது.

“நாடகத்தால் உன்னடியார் போல் கடித்து
நான் நடுவே
வீடகத்தே புகுந்திடுவான் மிகப் பெரிதும்
விரைகின்றேன்.”


என்றும் திருவாசகம் பேசுகிறது. நடிப்பும் விரைவும் இணைந்தவை போலும்! உண்மை, “உள்ளது போகாது” என்று அமைதியாக நடக்கும்; செய்யும் மண்ணிடையில் தான் நடிக்க இயலும். ஏனெனில் ஏமாறுபவர்கள் மண்ணில்தான் அதிகம். பொருள் செய்தல், அரசியல், மதம், மந்திர தந்திரங்கள் முதலிய அனைத்துத் துறைகளிலும் இன்று நடிப்பு புகுந்து விளையாடுகிறது. இன்று நமது நாட்டில் சோஷலிசம் என்பதே நடிப்பாளர்-