பக்கம்:திருவாசகத்தேன்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பொய்யும் யானும்
புறமே போந்தோம்!


இறைவன் உயர்த்தியுள்ள கொடி இடபக் கொடி. இடபம் அறத்தின் சின்னம். எருது , கடுமையாக உழைக்கவும் உழைப்பின் பயனை மற்றவர்க்குக் கொடுக்கவும் செய்கிறது. அதுபோல மனிதன் கடுமையாக உழைப்பதையே ஒழுக்கமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். பிறருக்காக உழைப்பது நோன்பு, தவம் என்று புறநானூறு கூறும்.

அறம்- தற்சார்பில்லாதது. அதனால் அறழ் விலைப் பொருள் அல்ல. அறத்தை விலைப் பொருளாகவும். ஆக்கக்கூடாது. “அறவிலை வாணிகன் ஆய் அலன்” என்று புறநானூறு கூறும். அறம் ஆன்மாவைச் சார்ந்தது. அறம், அகநிலைப் பண்பு. அறம், இம்மையின்பத்தையும் தரும்; மறுமை இன்பத்தையும் தரும். மாணிக்கவாசகர் “பொய்யும் யானும் புறமே போந்தோம்” என்றருளிச் செய்துள்ளார். திருவாசகப் பாடலில் வரும் புறம், அறத்திற்கு எதிரிடையான புறம். இறைவனுடைய திருவடி இன்பத்திற்குப் புறமாய புறம். புறம், உத்தரவாதமும் பாதுகாப்பும் இல்லாத நிலை. அற நெறிக்கு, அன்பு நெறிக்கு எதிரிடையானதெல்லாம். புறம். புறம், பயனற்றவை ஒன்று சேரும் இடம்; அல்லது,