பக்கம்:திருவாசகத்தேன்.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன் ☐ 11

ஆதலால், மாந்தர் வினை செய்தல் இயற்கை. ஆக்கமும் கூட! இங்ங்ணம் நல்லனவே பயப்பது வினை. சமய உலகில் வினையின் எதிர்வினைவைப் பற்றி மட்டுமே எடுத்துக் கூறினார்கள்; கூறிவருகிறார்கள். வினையின் விளைவு மக்களுக்குப் பொருளாக்கம்: மக்களுக்கு வாழ்வு. சமய உலகமும் வினை செய்தலை வேண்டாம் என்று ஒரு பொழுதும் கூறியதில்லை; கூற இயலாது. இறைவனே ஐந்தெர்ழில் செய்கிறான். சமய உலகமும் தொண்டு செய்யுமாறு பணிக்கிறது. திருத்தொண்டு செய்யுமாறு உணர்த்துகிறது. சிந்தனை, சொல், தொண்டு எல்லாமே வினைதான்்்! புலன்களால், பொறிகளால் வரும் செயலாக்கங்களைவிட, சிந்தனையால் வரும் வினை யாக்கம் கூடுதல் என்பதே உண்மை. மாணிக்கவாசகரே கூடச் செயல் செய்தவர் தானே! திருக்கோயில் கட்டியவர் தானே! அது ஒரு வினை தானே! ஆதலால் வினை இயற்றல் இயற்கை வினை செய்யும்பொழுது கொள்ளும் மனப்பாங்குதான் முக்கியம். வினையை-தொழிலைச் செய்யும்பொழுது எத்தகைய மனப்பாங்குடன் செய் கிறோம் என்பதே கேள்வி! செய்யும் வினையைவிட, தொழிலைவிட மனப்ப்ாங்கே விளைவுகள், எதிர்விளைவு களுக்குக் காரணமாக அமைகின்றன. அல்லது விளைவு கள்ே இல்லாமலும் போகின்றன. வினைகளின் செயற்பாடுகள் மனம், மொழி. மெய்யால் அமைகின்றன். மனம் விரும்பியும் விரும்பாமலும் செய்யும் விண்ைகளுக்கும் பயன் உண்டு. மனம் விரும்பிச் செய்கின்ற வினைகள் இன்பநலத் துய்ப்பிற்குக் காரணமாக அமைவன. மனம் விருப்பமில்லாமல் செய்யும் வினைகள் எதிர்விளைவு களைத் தரும். மனம் வெறுப்பால் செய்யும் வினைகளும் , உண்டு. இத்தகு வினைகளின் விளைவு துன்பமேயாம். ஆதலால் வினை-தொழில் இன்பமோ துன்பமோ தருவ தில்லை. வினைகள் இயற்றும்போது மனம் நிற்கும் நிலை யைப் பொறுத்தே இன்பமும் துன்பமும் விளையும். வினை-