உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருவாசகத்தேன்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்

தனித்துணையாக விளங்கக்கூடிய இறைவன் திருவடிகளைப் பற்றுதலே வாழ்க்கை; வாழ்க்கையின் பயன்!

          தனித்துணை நீ கிற்க யான்தருக்
              கித்தலை யால் கடந்த
          வினைத்துணை யேனை விடுதிகண்
              டாய் வினை யேனுடைய
          மனத்துணை யே!என்தன் வாழ்முத
              லேஎனக் கெய்ப்பில் வைப்பே
          தினைத்துணை யேனும் பொறேன்
              துயராக்கையின் திண்வ லையே!

(நீத்தல் விண்ணப்பம்-39)