பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. திருத்தெள்ளேனம் வான் கெட்டு மாருதம் மாய்ந்து அழல் நீர் மண் கெடினும் தான் கெட்டல் இன்றிச் சலிப்பு அறியாத் தன்மையனுக்கு ஊன் கெட்டு உயிர் கெட்டு உணர்வு கெட்டு என் உள்ளமும் போய் நான் கெட்டவா பாடித் தெள்ளேனம் கொட்டாமோ (18) விண்ணோர் முழுமுதல் பாதாளத்தார் வித்து மண்ணோர் மருந்து அயன் மால் உடைய வைப்பு அடியோம் கண்ஆர வந்து நின்றான் கருணைக் கழல்பாடித் தென்னா தென்னா என்று தெள்ளேணம் கொட்டாமோ (19) குலம் பாடிக் கொக்குஇறகும் பாடிக் கோல் வளையாள் நலம் பாடி நஞ்சு உண்டவா பாடி நாள் தோறும் அலம்பு ஆர் புனல் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற சிலம்பு ஆடல் பாடி நாம்தெள்ளேனம் கொட்டாமோ (20) 430