பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. திருச்சாழல் மலைஅரையன் பொன்பாவை வாள் நுதலாள் பெண்திருவை உலகுஅறியத் தீவேட்டான் என்னும்அது என் எடீ உலகுஅறியத் தீவேளாது ஒழிந்தனனேல் உலகு.அனைத்தும் கலைநவின்ற பொருள்கள் எல்லாம் கலங்கிடும்காண் சாழலோ (13) தேன்புக்க தண்பணைசூழ் தில்லைச் சிற்றம்பலவன் தான்புக்கு நட்டம் பயிலும்அது என் எடீ தான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணி எல்லாம் ஊன்புக்க வேல் காளிக்கூட்டம் காண் சாழலோ (14) கடகரியும் பரிமாவும் தேரும் உகந்துஎறாதே இடபம்உகந்து ஏறிய ஆறு எனக்குஅறிய இயம்பு எடி தடமதில்கள் அவைமூன்றும் தழல்எரித்த அந்நாளில் இடபம்.அதுஆய்த் தாங்கினான் திருமால் காண் சாழலோ (15) '444