பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. திருப்பூவல்லி எரிமூன்று தேவர்க்கு இரங்கி அருள் செய்தருளிச் சிரம்மூன்று அறத்தன் திருப்புருவம் நெரித்தருளி உருமூன்றும் ஆகி உணர்வு அரிது.ஆம் ஒருவனுமே புரம்மூன்று எரித்தவா பூவல்லி கொய்யாமோ (6) வணங்கத் தலை வைத்து வார் கழல் வாய் வாழ்த்த வைத்து இணங்கத் தன் சீர் அடியார் கூட்டமும் வைத்து எம்பெருமான் அணங்கொடு அணிதில்லை அம்பலத்தே ஆடுகின்ற குணம்கூரப்பாடி நாம் பூவல்லி கொய்யாமோ (7) நெறிசெய்தருளித் தன் சீர் அடியார் பொன் அடிக்கே குறிசெய்து கொண்டு என்னை ஆண்ட பிரான்குணம் பரவி முறிசெய்து நம்மை முழுதுஉடற்றும் பழவினையைக் கிறிசெய்தவா பாடிப் பூவல்லி கொய்யாமோ (8) 456