பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. பொன்னு ஊசல் மாதுஆடு பாகத் தான் உத்தர கோசமங்ககைத் தாதுஆடு கொன்றைச் சடையான் அடியாருள் கோதாட்டி நாயேனை ஆட்கொண்டு என்தொல்பிறவித் தீது ஒடாவண்ணம் திகழப் பிறப்பு:அறுப்பான் காது.ஆடு குண்டலங்கள் பாடிக் கசிந்துஅன்பால் போதுஆடு பூண்முலையிர் பொன்ஊசல் ஆடாமோ (6) உன்னற்கு அரியதிரு உத்தர கோசமங்கை மன்னிப் பொலிந்துஇருந்த மாமறையோன் தன்புகழே பன்னிப் பணிந்துஇறைஞ்சப் பாவங்கள் பற்றுஅறுப்பான் அன்னத்தின் மேல்ஏறி ஆடும் அணிமயில்போல் என்அத்தன் என்னையும் ஆட்கொண்டான் எழில்பாடிப் பொன்ஒத்த பூண்முலையிர் பொன்ஊசல் ஆடாமோ (7) |H